Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19-04-2022
Share:

By Village Missionary Movement

Tuesday, 19-Apr-2022

இன்றைய தியானம்(Tamil) 19-04-2022

 

ஊட்டச்சத்து இரகசியம்

 

“வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது;...” - 2 தீமோத்தேயு 3:16

 

“Boost is the secret of my Energy” 90 களில் சிறுவர்கள், வாலிபர்கள் மட்டுமல்லாது பெரியவர்களையும் மிகவும் கவர்ந்த விளம்பரத்தின் வார்த்தைகள்தான் இது. அதிலும் இந்த வார்த்தைகளைக் கூறுபவர் ஒரு புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் என்பதால் அப்போது இந்த வார்த்தை மூலை முடுக்கெல்லாம் ஒலித்தது. உண்மையிலேயே அவருக்கு அதுதான் ஆற்றலின் இரகசியமா என்றெல்லாம் யோசித்துப் பார்த்தால் அதன் பதில் கேள்விக்குறி தான். காரணம் அநேக கம்பெனிகளும், அதன் தயாரிப்புகளும் பெருகி விட்டன. ஜனங்கள் புதியது வரவர பழையதைக் கழித்துப் போட ஆரம்பித்தனர். இன்று சில ஆண்டுகளைக் கடந்து நாம் நிற்கிறோம். குறிப்பிட்ட அந்த பானமும் உண்டு. இன்னும் அநேகமும் உண்டு. மக்கள் எல்லாவற்றையும் பத்தோடு பதினொன்றாக பார்க்கப் பழகிவிட்டனர். ஆனால் அன்று போல அதே வார்த்தைகளை சொல்ல யாரும் முன்வருவதில்லை. இது நமக்கு ஒரு படிப்பினை!

 

அப்போஸ்தலனாகிய பவுல் தனது இளம் ஊழியக்காரனாகிய தீமோத்தேயுவுக்கு கடிதம் எழுதும் போது ஒரு காரியத்தை எழுதுகிறதை 2 தீமோ. 3:14-17 வரை பார்க்கிறோம். அதில் அவர் என்ன சொல்ல வருகிறாரென்றால் நீ சிறுவயது முதல் கற்றுக் கொண்ட காரியங்களில் நிலைத்திரு. வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. அவைகள் ஒரு மனிதனை உருவாக்குவதற்குப் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. அதாவது நீ சிறுவயது முதல் அறிந்திருகிற வேதத்தை ஏதோ ஒரு பழமையான காரியம் என்று நினைக்காமல் அவைகளில் நிலைத்திரு. அதுதான் உன்னை உருவாக்கும். அவைகள் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. இப்படியெல்லாம் வேதத்தைப் பற்றி அழகாக எடுத்துரைக்கிறார்.

 

பிரியமானவர்களே! நமது கையில் இருப்பது பழமை வேதாகமம். ஆனால் அதைத் தியானிக்க தியானிக்க கிடைப்பதெல்லாம் புதுமை! நமக்குப் பரிசுத்த வேதாகமம் பத்தோடு பதினொன்று அல்ல. அது ஒன்றுதான் நமக்கு வழிகாட்டி. பரிசுத்த வேதாகமத்தை தினந்தோறும் இரவும் பகலும் தியானித்தால் அது நம்மை கனிதரும் மரத்தைப் போல மாற்றும். கிறிஸ்தவ வாழ்க்கை வாழ ஆத்தும பெலன் மிகவும் அவசியம். அந்த பெலனைக் கொடுக்கும் ஒரே ஊட்டச்சத்து பரிசுத்த வேதாகமம். இன்றைக்கு உள்ள சிறுபிள்ளைகள், வாலிபர்கள் ஏன் இளம் தலைமுறையினருக்கு பரிசுத்த வேதத்தின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுக்கும் பெரிய பொறுப்பு நமது கைகளில் தான் உள்ளது. ‘’Bible is the secret of My Energy’’ என்று இந்தத் தலைமுறையினரை வெறுமனே சொல்லுகிறவர்களாக அல்ல, அதின்படி நடக்கிறவர்களாக மாற்றுவோம்!

- T. சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு

நமக்கு தேவன் தந்துள்ள நான்கு சக்கர, இருசக்கர வாகனங்கள் பழுதின்றி பயன்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş