Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18-04-2022
Share:

By Village Missionary Movement

Monday, 18-Apr-2022

இன்றைய தியானம்(Tamil) 18-04-2022

 

நல்லா இருக்க ஆசையா?

 

“படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதியஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.” - யோவான் 5:6

 

இந்த பத்திரிக்கையைப் படித்துக் கொண்டிருக்கிற உங்களைப் பார்த்து ஒன்று கேட்கிறேன். ‘’நல்லா இருக்கணும்னு ஆசைப்படுகிறீங்களா?’’ அட, என்னடா இப்படி ஒரு கேள்வியை போய் கேட்குறாங்க, யாருக்குத்தான் நல்லா இருக்கணும்னு ஆசை இருக்காது அப்படித்தான சொல்லுறீங்க. ஒருமுறை நான் ஒரு சூப்பர் மார்க்கெட் போய்ட்டு வர்றப்போ பாலத்தின் ஓரமாக நிறைய பிச்சைக்காரங்க பிச்சை எடுத்துட்டு இருந்தாங்க. அதைப் பார்த்துவிட்டு கடந்து செல்ல நினைக்கும் வேளையில், கடைசியாக அமர்ந்திருந்த ஒரு நபர் வித்தியாசமான முறையில் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார். என்னவென்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நபர் தான் அணிந்திருந்த ஆடையை சற்று விலக்கி காட்டி கொண்டிருந்தார். என்ன கொடுமை! அவருடைய காலில் அழுகின புண்களும், எலும்புகளும் தெரிந்து கொண்டிருந்த அந்தக் காட்சியை என்னால் பார்க்க முடியவில்லை. அந்த அழுகின புண்களை காட்டிக் கொண்டு அவர் பிச்சை கேட்கிறார். நான் அவரின் அருகில் சென்று, ஐயா நான் ஒரு டாக்டர். நான் பணிபுரியும் மருத்துவமனை அருகில் தான் உள்ளது. எவ்வளவோ மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாருங்கள், நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று சொன்ன பொழுது அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், ‘’என்னுடைய புண்களை காட்டி தான் நான் பிச்சையெடுத்து கொண்டிருக்கிறேன். அதையும் சரி செய்துவிட்டால் நான் சாப்பிடுவதற்கு என்ன செய்வது?’’ என்று கூறிவிட்டு அருகில் உள்ள மற்ற பிச்சைக்காரர்களிடம் சொல்லி சிரித்துக் கொண்டார்.

 

இதேநிலையில் தான் இன்று நாமும் இருக்கிறோம். 38 வருடமாக வியாதியோடு இருந்த மனிதனைப் பார்த்து இயேசு கேட்கிறார், ‘’நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று. வாஞ்சைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றவே ஆசைப்படுகிறார். இன்று இதைப் படித்துக்கொண்டிருக்கிற உங்களுக்கு நீங்கள் சுகமாக வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும், இயேசுவுக்காக பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று என்ன ஆசையெல்லாம் உங்களுக்குள் வைத்திருக்கிறீர்கள்? ஒருவேளை 38 வருடமாக வியாதியாக இருந்த அந்த வியாதியஸ்தன் சலிப்போடு, சுகமாக வேண்டும் என்ற விருப்பம் இல்லாமல் படுத்திருக்கலாம். உங்களுடைய இருதயத்தின் நினைவுகளை அறிந்து இயேசுகிறிஸ்து கேட்கிறார். ‘’ நீ சுகமாக விரும்புகிறாயா?’’ என்று. உங்களுடைய ஆசைகளை, மன விருப்பங்களை நிறைவேற்றவே அவர் உங்கள் இருதயத்தின் கதவுகளை தட்டிக்கொண்டே இருக்கிறார். மகனே, மகளே உனக்கு என்ன வேண்டும் என்று ஆசைப்படுகிறாய். உனக்காகவே கதவண்டையில் காத்திருக்கிறார். இப்போதே உன் இருதயத்தின் கதவைத் திறப்பாயா? அப்பா உன் விருப்பத்தை கேட்க ஆசைப்படுகிறார்; நீயும் உன் விருப்பத்தை தெரிவி, தாமதிக்காதே!

- Sis. விஷாலி

 

ஜெபக்குறிப்பு:

அலுவலகப்பணிக்கு Tally, Designing அனுபவமுள்ள பணியாளர்களை தேவன் நமக்குக் கொண்டு வர ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al