Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்: 17-04-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 17-Apr-2022

இன்றைய தியானம்: 17-04-2022 (Kids Special)

கிறிஸ்துவின் சாயல்

 “… உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; …உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.” - மத்தேயு 5:44

Hello friends, இன்னைக்கு என்ன Day தெரியுமா? ஈஸ்டர். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை கொண்டாடுவது தானே! ஆமா குட்டீஸ், இயேசப்பா மரணத்தை ஜெயித்து இன்றைக்கும் ஜீவிக்கின்ற தேவனாய் நம்மோடு கூட இருக்கின்றார். அவருடைய சாயலை பிரதிபலிக்கின்ற வாழ்க்கை வாழ்வது தான் நாம் அவருக்குக் கொடுக்கும் பரிசு. எஸ்தர் Jesus -க்கு என்ன பரிசு கொடுத்தாள் என்று கதை கேட்கலாமா?

ஏழாம் வகுப்பு படிக்கும் சுகந்தி, மிகவும் சுட்டித்தனம் நிறைந்தவள். எல்லாரையும் வம்புக்கு இழுப்பாள். மற்ற பிள்ளைகளும் அவளுடன் பதிலுக்கு சண்டை போடுவார்கள். ரிப்பனை பிடித்து இழுப்பது, பேனாவை எடுத்து ஒளித்து வைப்பது இப்படி குறும்பு பண்ணுவது சில நேரங்களில் அடிபிடி சண்டையில் கூட முடியும். இதை டீச்சர் கண்டித்தும் சுகந்தி திருந்துவதாக இல்லை. ஒரு நாள் எஸ்தரோட அறிவியல் நோட்டை எடுத்து கிழித்துவிட்டாள். மற்ற பிள்ளைகள் போல எஸ்தர் பதிலுக்கு சண்டை போடமாட்டாள், அமைதியாக இருப்பாள். எஸ்தரின் நெருங்கிய தோழி ஜோதி வேகமாக வந்தாள் ‘’அந்த சுகந்தி உன் நோட்டை கிழித்ததை பார்த்தேன். இப்படி அமைதியாக இருக்கிறாயே, நானாக இருந்தால் பதிலுக்கு அவள் புத்தகத்தை கிழித்திருப்பேன்’’ என்று உரிமையோடு திட்டிவிட்டு சென்றாள்.

ஒரு நாள் திடீரென்று சுகந்திக்கு காய்ச்சல் வந்தது. ஒரு வாரம் பள்ளிக்கு வரவில்லை. எஸ்தர் சுகந்தியை பார்க்க நினைத்து அவளுக்குப் பிடித்த Cream Biscuit வாங்கிச் சென்றாள். எஸ்தரை கண்டவுடன் சுகந்திக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவளுடைய வகுப்பு பிள்ளைகள் யாருமே பார்க்க வரவில்லை. ஆனால் எஸ்தர் என் மீது இவ்வளவு அன்பாய் இருக்கிறாளே! என்று தன் தவறை உணர்ந்து வருத்தப்பட்டாள். அடுத்தநாள் ஞாயிறு பள்ளிக்கு சென்றாள். எஸ்தர் சுகந்தியை கண்டவுடன் சந்தோஷத்தோடு ஓடிவந்து, என்னப்பா உடம்பு சரியாகி விட்டதா? என்றாள். ஓ, சரியாகி விட்டதே! நீ நேற்று எனக்காக ஜெபித்த போதே சரியாகி விட்டது. எனக்கும் உன்னைப் போல நல்ல பிள்ளையாக இருக்கணும்னு ஆசையா இருந்தது. அதனாலதான் இங்கே வந்தேன் என்று சுகந்தி சொன்னதும், எஸ்தர் மகிழ்ச்சியோடு ஆண்டவருக்கு நன்றி கூறினாள்.

அருமையான தம்பி தங்காய் இயேசப்பாவின் சாயல், அதாவது தவறு செய்த போதும் மன்னித்து நேசிக்கின்ற குணம் எஸ்தரிடம் இருந்ததால் சுட்டிப்பெண் சுகந்தி இயேசுவை அறிந்து கொண்டாள். நீயும், இயேசுவின் சாயலை பிரதிபலிப்பது தான் நீ அவருக்குக் கொடுக்கும் பரிசு. Happy Easter.

Mrs.ஜீவா விஜய்

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள

Whats app:

தமிழில் பெற - +91 94440 11864

ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002

ஹிந்தியில் பெற - +91 93858 10496

தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம்

(Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு:

+91 94873 67663, +91 94424 93250

 

 

 

 



hacklink satın al