Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14-04-2022
Share:

By Village Missionary Movement

Friday, 15-Apr-2022

இன்றைய தியானம்(Tamil) 14-04-2022

 

சிலுவை சுமந்த சீமோன்

 

“…சீமோன்... அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்.’’ - மாற்கு15:21

 

போர்ச்சேவகர் கூட்டம் ஆண்டவரை பரியாசம் பண்ணின பின்பு அவரை சிலுவையில் அறையும்படி கொண்டு போனார்கள். போகும் வழியில் இயேசுவின் சிலுவையை சுமக்கும்படி சிரேனே ஊரானாகிய சீமோனை பலவந்தப்படுத்தினார்கள். இயேசு சிலுவைப் பாதையில் அமைதியாயிருந்தது போல, சீமோனும் பதில் ஏதும் பேசாமல் இயேசுவின் சிலுவையை சுமந்து ஆண்டவரை சற்றே இளைப்பாறப் பண்ணினார்.

 

இயேசுவின் சிலுவைப் பாதையில் அநேகர் இருந்தாலும் போர்ச்சேவகரின் கண்கள் சீமோன் மீது மட்டும் விழுந்தது போல, நீங்கள் இருக்கும் இடத்திலும் வேலை பார்க்கும் ஸ்தலங்களிலும் அநேகர் இருந்தாலும், நீதியாய் நடக்கும் நீங்கள் மட்டுமே இயேசுவுக்காக தொடர்ந்து பாடுபடுகிறீர்களா? பாரச் சிலுவையை சுமக்கிறீர்களா? கவலைப்படாதிருங்கள். தாங்கள் இருந்த இடத்தில் தனி நபர்களாக பாடுபட்ட தானியேல், யோபு, யோசேப்பு போன்றவர்களை விடுவித்து உயர்த்தின ஆண்டவர் உங்களையும் உயர்த்துவார்.

 

அது மாத்திரமல்ல, ஆண்டவருடைய சிலுவையை சற்றே சுமந்த சீமோனின் பிள்ளைகளான அலெக்சந்தர் மற்றும் ரூப் ஆகியோரில் ஒருவர் திருச்சபையின் தலைவராகவும் மற்றொருவர் அரசாங்கத்தில் உயர்ந்த அதிகாரியாகவும் உயர்த்தப்பட்டதாகவும் சபை சரித்திரம் கூறுகிறது.

 

எனவே இந்த பெரிய வெள்ளிக்கிழமையன்று உங்களுடைய சிலுவையை அனுதினமும் சந்தோஷமாய் சுமக்கத் தீர்மானியுங்கள். சீமோனின் சந்ததியை போல உங்கள் சந்ததியையும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உயர்த்துவார். அநேக முத்துக்கள் பதித்த மகிமையான கிரீடம் பரலோகத்தில் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

 

நினைவிற்கு: இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அனுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன் – பவுல்

- Selected

 

ஜெபக்குறிப்பு: 

WhatsApp, YouTube, Twitter, email மூலம் வெளிவரும் தின தியான செய்தியை வாசிப்போர், கேட்போர் கர்த்தருக்கென்று கனி கொடுக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al