By Village Missionary Movement
Thursday, 14-Apr-2022இன்றைய தியானம்(Tamil) 14-04-2022
ஒப்புவித்த இயேசு
‘’இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்...’’ - லூக்கா 23:46
இயேசு சிலுவையில் மொழிந்த ஏழாம் வார்த்தை:
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி. இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கின நாள் மட்டுமல்ல, அவர் ஒவ்வொரு நாளும் தன்னுடைய எல்லாக் காரியங்களையும் பிதாவின் கைகளில் ஒப்புக்கொடுத்தே வாழ்ந்து வந்தார் என்பதை வேதத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ளமுடியும். இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் ஒவ்வொரு நாளையும் பிதாவின் கைகளில் ஒப்புக் கொடுத்தார். பூமியின் தினசரி வேலைகள், தன் சீஷர்கள், வசனத்தைக் கேட்ட விசுவாசிகள் என எல்லாவற்றையுமே பிதாவின் கைகளில் ஒப்புவித்தார். சிலுவையில் அறையப்படுவற்கு முந்தின நாள் இரவு முழுவதும் பிதாவை நோக்கி ஜெபித்தார் என்று அநேக இடங்களில் பார்க்கிறோம். என்னே ஒரு மாதிரி!
தன்னைக் குறித்ததான பிதாவின் சித்தமாகிய சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பதையும் நிறைவேற்றினார். இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக இருந்து ஆவியை எடுப்பது எந்த மனுஷனாலும் கூடாது. ஆகவே இயேசுவே பிதாவின் கைகளில் தன் ஆவியை ஒப்புவித்து ஜீவனை விட்டார் என்று வேதத்தின் மூலம் அறிந்துகொள்கிறோம். எல்லா நொடிப் பொழுதும் இயேசு கிறிஸ்து தன்னைப் பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுத்தே ஒரு அற்புதமான வாழ்க்கையை இந்தப் பூமியில் வாழ்ந்து முடித்தார்.
இதை வாசிக்கின்ற நண்பர்களே! உங்களின் நிலை என்ன? ஜெபத்தில் தேவனுடைய கைகளில் எதை ஒப்புக்கொடுக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையை என்றைக்காவது தேவனின் கைகளில் ஒப்புக்கொடுத்துள்ளீர்களா? உங்கள் பிள்ளைகளின் வாழ்வை ஒப்புக்கொடுத்துள்ளீர்களா? நம்மை ஒப்புக் கொடுக்கும் போது பாவ மரணத்திலிருந்து மீட்டு ஒரு புது ஜீவனை தந்து இரட்சிப்பின் சந்தோஷத்துடன் வாழச் செய்து மறுமையில் நித்திய ஜீவனையும் தருகிறார். உங்கள் ஆசை, விருப்பம் என ஒன்று விடாமல் இயேசுவைப்போல எல்லாவற்றையும் பிதாவாகிய தேவனுடைய கைகளில் ஒப்புக்கொடுங்கள்! பாவமீட்பையும் நித்திய ஜீவனையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
- T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கனடா, ஒடியா, மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் வெளிவரும் தினதியான செய்தியின் மூலம் எல்லா மக்களும் கிறிஸ்துவுக்குள் வளர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250