Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  24-01-2021
Share:

By Village Missionary Movement

Sunday, 24-Jan-2021

இன்றைய தியானம்(Tamil)  24-01-2021

பாதுகாக்கும் தேவன் 

“...மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” – மத்தேயு 5:16 

“ஏ, என்னம்மா செய்கிறாய்? சீக்கிரம் கிளம்பு. இன்றைக்கு அறுவடை செய்ய வயலுக்கு போகணும், 10 வேலையாட்களை ரெடி பண்ணியிருக்கேன். நான் முன்னாடி போறேன். நீ சாப்பாடு எடுத்துக் கொண்டு வேகமா வந்துரு” ன்னு சொன்னாரு ராசைய்யா. இவர் குடும்பமாய் ஆண்டவரை தேடுவதில் முதலிடம் கொடுத்து தேவனிடத்தில் பயபக்தியாய் வாழ்ந்து வந்தார். தேவன் அவர்களுக்கு இருந்த எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார். அவர் விவசாயம் செய்த வயலின் விளைச்சல்களும் ஆசீர்வதிக்கப்பட்டது. 

அந்த வருடமும் நெல்லை அறுவடை செய்து களத்திற்கு கொண்டு வந்தபோது, திடீர்மழை! ஆகவே நெற்கதிரை குவியலாக்கி  நனையாதபடி மூடிச்சென்றனர். பக்கத்து வயல்காரர்களும் அன்று அறுவடை செய்திருந்தனர். அதேநிலைதான் அவர்களுக்கும். அடுத்த நாள் நெற்கதிரை தனியாக பிரித்தெடுப்பதற்கு வந்து பார்த்தால் பெரிய அதிர்ச்சி! அருகிலுள்ள காட்டிலிருந்து காட்டு வாத்துகள் (Wild Ducks) பறந்துவந்து கதிர்களை சின்னாபின்னமாக சிதறடித்திருந்தன. அவைகள் வெட்டுக்கிளியைப்போல் கூட்டம் கூட்டமாய் பயணம் செய்யும். இரவு நேரங்களில் தானியங்களை குறிவைத்து சாப்பிடும். அந்த வாத்துகள்தான் இதை சாப்பிட்டிருக்கிறது என்று அதன் காலடி தடயங்களை பார்த்து தெரிந்து கொண்டார். ஐயோ, கடினமாய் உழைத்து சம்பாதித்த எல்லா நெல்மணிகளும் வீணாகி விட்டதே என்று பக்கத்து வயல்காரர் கலங்கினார். அப்போதுதான் ராசைய்யா அவர் வயல் பக்கமாய் வந்து பார்த்தார். ஒரு நெல்மணி கூட சிந்தப்படாமல் இருந்ததைக் கண்டு, அவரால் நம்பவே முடியவில்லை. இவர் நிலத்தில் ஒரு வாத்து கூட கால் வைக்கவில்லை. “ஆண்டவரே, என்னை மட்டுமல்ல எனக்கு உண்டான எல்லாவற்றையும் வேலியடைத்து காத்துக் கொண்டீரே!” என்று நன்றி சொன்னார். பக்கத்து வயலில் நின்றவர்கள் இந்த சம்பவத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு ஆண்டவர் மேல் விசுவாசம் வைத்தார்கள். ராசைய்யா குடும்பத்தாரின் நறுமண வாழ்க்கை அநேகரை கிறிஸ்துவண்டை கொண்டு வந்தது. 

என்ன குட்டீஸ்! இயேசப்பா தம்மை தேடுகின்றவர்களை அற்புதமாய் பாதுகாக்கிறார் இல்லையா? அது மட்டுமா அவர்கள் மூலம் அநேகர் கிறிஸ்துவின் அன்பை அறிந்து கொள்கிறார்கள். நீயும் இயேசுவின் நறுமணம் வீசும் நற்சாட்சியாய் வாழ்ந்து காட்டுவாயா?
-    Mrs. ஜீவா விஜய்

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al