Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  08-04-2022
Share:

By Village Missionary Movement

Friday, 08-Apr-2022

இன்றைய தியானம்(Tamil)  08-04-2022

பரதீசில் பங்கு 

“இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப்  பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்றார்” - லூக்கா 23:43

இயேசு சிலுவையில் மொழிந்த இரண்டாம் வார்த்தை:
கிரியைகளினால் அல்ல, கிருபையினாலே  விசுவாசத்தைக் கொண்டு  இரட்சிப்பை அடைய முடியும் என்பதற்கு வேதத்திலுள்ள சரியான எடுத்துக்காட்டு இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் ஒருவன். அவன் எந்த சபையையும் சேர்ந்தவனல்ல, கர்த்தரின் பந்தியில்  பங்குபெற்றவனுமல்ல, எந்த ஊழியமும் செய்யவில்லை. ஊழியத்திற்காக பண உதவியும் செய்ததில்லை. ஆனால் அவனது வாழ்வில் கடைசி  மணித்துளியில் அவனது உள்ளத்தில் உண்டான “விசுவாசம்” அவன் இரட்சிப்படையவும் பரலோகத்திற்கு செல்லவும் வழி திறந்தது. அவனது ஆவிக்குரிய வளர்ச்சி  சில மணிநேரம் தான் என்றாலும் அது அவனை கிறிஸ்துவிடம் வழிநடத்தி,  நரகத்தினின்று அவனை தப்பிக்கச்செய்தது.

இவன் ஒரு பொல்லாத மனிதன், ஒரு கொலைபாதகன்தான், மரணதண்டனை பெற்றவன்தான், இவனை பார்த்தவர்கள், “இனி இவனுக்கு  இரக்கத்திற்கு இடமேயில்லை, காலம் கடந்து விட்டது” என நினைத்திருக்கலாம். ஆனால் அவனது வேண்டுகோளுக்கு இயேசுகிறிஸ்து  உடனே பதிலளிக்கிறார். அவனோடு அன்பாக பேசுகிறார், அவனை முழுவதுமாக  மன்னித்துவிட்டார். பாவங்களை முற்றிலும் கழுவினார். கருணையோடு  ஏற்றுக்கொண்டார். இலவசமாக நீதிமானாக்கினார். தான் மரித்துக் கொண்டிருந்த அந்த வேளையிலும் கூட, ஒரு பாவிக்கு  நித்திய  ஜீவனை உறுதிப்படுத்தினார் கிறிஸ்து.
 
இந்த தியானத்தை வாசிக்கும் நீங்கள் யாராயிருந்தாலும்  ஒருபோதும் நம்பிக்கை இழக்கவேண்டாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக  இயேசு எப்படிப்பட்டவராயிருந்தாரோ அப்படியேதான் இன்றும் இருக்கிறார். உங்கள் தலையிலுள்ள முடியைவிட உங்கள் பாவங்கள் அதிகமாக இருந்தால் என்ன? தீய பழக்கங்களும் உங்களோடு கூடவே சேர்ந்து வளர்ந்திருந்தாலும் என்ன? இவை துக்ககரமானதுதான். இருந்தாலும்  இன்னும் நீங்கள் நம்பிக்கை கொள்ளலாம். கிறிஸ்துவால் உங்களை குணப்படுத்த முடியும். புழுதியிலிருந்து உங்களை தூக்கமுடியும். மோட்சம் உங்களுக்கு அடைக்கப்படவில்லை. நீங்கள் தாழ்மையோடு உங்கள் ஆத்துமாவை அவரின் கரங்களில் ஒப்புவித்தீர்களானால் அவர் உங்களை ஏற்றுக்கொள்வார். அவர் மிகுந்த இரக்கமும், இளகிய மனதும் உடையவர். இப்போதே இயேசுவிடம் வாருங்கள்! நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
-    J. C. ரைல்

ஜெபக்குறிப்பு
மீடியா ஊழியங்களில் அனுபவமுள்ள அநேக வாலிபர்களை தேவன் நம்முடன் இணைக்க ஜெபியுங்கள்.

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al