Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  06-04-2022
Share:

By Village Missionary Movement

Wednesday, 06-Apr-2022

இன்றைய தியானம்(Tamil)  06-04-2022

என்னே ஓர் தியாகம்!

“...நாமும் சகோதரருக்காக  ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.”  - 1 யோவான் 3:16

நம்மெல்லாருக்கும் மிக நன்றாகத் தெரிந்த ஒரு ஓவியம் “ஜெபிக்கும் கரங்கள்” (Praying Hands).  நம்மில்  நிறைய பேருக்கு அதன் பின்னுள்ள ஒரு மனதை உருக்கும் சம்பவம் உண்டு என்பது தெரியுமா? என்று தெரியவில்லை. 15ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஒரு சிறிய கிராமத்தில்  ஒரு குடும்பத்தில்  18  பிள்ளைகள். அப்பா ஒரு தங்க வேலை செய்பவர். பிள்ளைகளுக்கு அனுதினமும் சாப்பாடு கொடுப்பதே பெருங்கஷ்டமாக  இருந்தது. இந்த நிலைமையில் ஆல்பிரட், ஆல்பர்ட் என்ற இரண்டு பிள்ளைகளுக்கும் நூரம்பர்க்கிலுள்ள ஒரு கலைக்கல்லூரியில்  ஓவியக்கலை படிக்க ஆசை. தம் அப்பாவால் கண்டிப்பாக படிக்க வைக்க முடியாது என அறிந்திருந்தனர்.

ஆகவே இருவரும் ஒரு தீர்மானம் செய்து ஒரு நாணயத்தைப் “ பூவா, தலையா“ போட்டுப் பார்த்து தலை யாருக்கு வருகிறதோ அவர் முதலில் சென்று 4 ஆண்டுகள் படிக்க வேண்டும். அதற்கு பண உதவி செய்ய மற்றவர் அருகிலுள்ள சுரங்கத்தில் வேலை செய்ய வேண்டும்.  ஆல்பிரட்டிற்கு வாய்ப்புக் கிடைத்தது. அவர் படிக்கச் சென்றார். ஆல்பர்ட் 4 ஆண்டுகள் அபாயகரமான அந்த சுரங்க தொழில் செய்து தன் சகோதரன் படிப்பிற்கு பண உதவி செய்தார்.
 
4 ஆண்டுகள் கழித்து ஒரு சிறந்த ஓவியக் கலைஞராய் ஆல்பிரட் திரும்பி வந்த போது அதைக் கொண்டாடும் பொருட்டு குடும்பத்தினர் வரவேற்று விருந்தளித்து மகிழ்ந்தனர். விருந்தின் முடிவில் ஆல்பிரட் எழுந்து “அண்ணன் தாங்கள் நூரம்பர்க் சென்று படித்து வாருங்கள் நான் உங்களுக்கு பண உதவி செய்கிறேன்” என்றான். “தம்பி 4 ஆண்டுகள் வேலை செய்ததில் என் கை விரல்கள் எல்லாம் சிதைந்து ஆர்த்ரிடிஸ் என்ற எலும்பு சிதைவு நோய் வந்ததால் ஒரு சிறிய பிரஷ் அல்லது பேனா கூட பிடிக்க முடியாது“ என்று ஆல்பர்ட் கண்ணீர் மல்க கூறினான். அண்ணனுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக சிதைந்த கரங்கள் கூப்பியிருக்கும் படம் வரைந்தான். அது தான் உலகப்புகழ் பெற்ற “ஜெபிக்கும் கரங்கள்“ என்ற ஓவியம்.

நாமும் கூட நம் பாவங்களுக்காக உச்சி முதல் உள்ளங்கால் வரை  காயமடைந்து, சிதைந்து சிலுவையில் ஆணிகள் அடிக்க ஒப்புக்கொடுத்த இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூருவோம் “சிலுவை சுமந்த உருவம்“ என்று ஓவியம் வரைந்து சுவர்களில் தொங்க விடுவதாலல்ல, நம் உள்ளத்தை அவருக்குக் கொடுத்து, அநேகருக்கு அவர் அன்பை வெளிப்படுத்துவோமாக!
“ சிலுவை சுமந்த உருவம் சிந்தின ரத்தம் புரண்டோடியே!
நதி போலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டைவா!”
-    Mrs. ஜாஸ்மின் பால் 

ஜெபக்குறிப்பு:
நம்பிக்கை டிவியில் ஒளிபரப்பாகிவரும் கிராமிய நேரம் நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள ஜெபியுங்கள்.

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al