Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  04-04-2022
Share:

By Village Missionary Movement

Sunday, 03-Apr-2022

இன்றைய தியானம்(Tamil)  04-04-2022

ஒரு டம்ளர் பால் 

“இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்;… “ - மாற்கு 14:8                    
மேலே கொடுக்கப்பட்டுள்ள வேத பகுதியில் ஒரு ஸ்திரீ இயேசுவின் தலையில்  விலையுயர்ந்த  தைலத்தை ஊற்றும் சம்பவத்தை வாசிக்கிறோம். அவள் அதை செய்ததும் சுற்றியிருந்தவர்கள் அவளைக் குறித்து முறுமுறுக்கின்றனர். அப்பொழுது இயேசு, இவள் என்னிடத்தில் “நற்கிரியையைச்” செய்தாள் என்று சொல்லி அவளை பாராட்டுகின்றார். விலை மதிப்புமிக்க தைலம். அவள் இயேசுவை விலையேறப் பெற்றவராகக் கண்டு, அவர்மேல் கொண்ட அன்பினால் அதை செய்தாள்.

இன்றைய தினத்திலே நம்முடைய வாழ்வை நாம் சற்று ஆராய்ந்து பார்போம். ஆண்டவர் நம்மைக் குறித்து நற்கிரியை செய்கிறோம்  என்று சொல்லத்தக்கதாக இருக்கின்றோமா? நம்மால் இயன்றதை ஆண்டவருக்கு செய்கின்றோமா? நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம். ஒரு வேளை என்னால் எண்ண செய்ய முடியும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் சில நற்கிரியைகள் அனைவரும் செய்யக்கூடியவை. உதாரணமாக  பட்டினியாய் இருப்பவர்களுக்கு  உணவு கொடுக்கலாம்,  உடையின்றி  இருப்பவர்களுக்கு எளிய  உடைகளை  வாங்கிக் கொடுக்கலாம்,  டியூசன் எடுக்கலாம்,  நோயில் இருப்பவர்களை சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறலாம். இப்படி பல உள்ளன.

ஒருமுறை ஒரு தாயார் ரோட்டில் மிகவும் சோர்ந்து போயிருந்த  ஒரு சிறுவனுக்கு ஒரு டம்ளர் பால் கொடுத்தார்களாம். பல நாட்கள் சென்ற பின் அந்த தாயார் வியாதிப்பட்டு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்கள். அது ஒரு பெரிய தனியார் மருத்துவமனை, வெகு தொகை செலுத்த வேண்டும் என அந்தத் தாயார் எண்ணிக்கொண்டிருந்தர்கள். இறுதிநாள் சிகிச்சைக்குப் பின் பில் வந்தது. அதில் மொத்ததொகை என்ற இடத்தில் ”ஒரு டம்ளர் பால்”  என எழுதப்பட்டிருந்தது. பின்பு தான்  அவருக்கு அறிவிக்கப்பட்டது. அந்த மருத்துவமனையின் மருத்துவர் அவர் ஒரு டம்ளர் பால் கொடுத்த அந்த சிறுவன் என்று. 

ஆம் பிரியமானவர்களே! நாம் அளக்கும் அளவின் படியே நிச்சயம் மீண்டுமாய் தேவன் நமக்கு அளந்து தருவார். எனவே நற்கிரியைகளை செய்வோம்! இயன்றதை செய்வோம்!
-    Mrs. புவனா தனபாலன்                                          

ஜெபக்குறிப்பு: 
10th மற்றும் 12th  படிக்கும் மிஷனெரிகளின்  பிள்ளைகள், சிறுவர் இல்ல பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுக்க ஜெபியுங்கள்.

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al