By Village Missionary Movement
Sunday, 03-Apr-2022இன்றைய தியானம்(Tamil) 03-04-2022 (Kids Special)
கவலை வேண்டாம்
“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” –மத்தேயு 6:33
Hello குட்டீஸ்! How are you? உங்களுக்கு செல்லப் பிராணிகள் வளர்ப்பதென்றால் ரொம்ப பிடிக்குமா? என்னவெல்லாம் வளர்ப்பீங்க சொல்லுங்க பார்ப்போம். நாய், பூனை, கிளி, ஆடு இப்படி சொல்லிக் கொண்டே இருப்பீங்க இல்லையா? உங்களை மாதிரி தான் ரோஸி என்ற அக்காவும் பூனை ஒன்றை வீட்டில் வைத்து வளர்த்து வந்தார்கள். அதுக்கு தினமும் பால், மீன் என அதற்கு பிடித்ததெல்லாம் கொடுத்து செல்லமாக பராமரித்து வந்தாங்க. தீடீரென்று ஒரு நாள் அந்த பூனை காணாமல் போய்விட்டது.
எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. ரொம்பவே கவலையாய் இருந்தது. சிறிது நாள் கழித்து எதிர்பாராத நேரத்தில் அந்த பூனை ரோஸி அக்கா வீட்டிற்கு வந்தது. அதைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். அந்த பூனைக்கு பிடித்த மீனை போட்டதும் சாப்பிடாமல் வாயில் கவ்விக் கொண்டு போனது.
பூனையை பின்தொடர்த்து போய் பார்த்தால்.... அருமையான காட்சி! என்னவென்று நினைக்கிறீங்க? அது போட்டிருந்த மூன்று பூனைக்குட்டிக்கும் அந்த மீனை மூன்று பீஸாக தன் பற்களால் கட் பண்ணிக்கொடுத்தது. இயேசப்பா அந்த பூனைக்கு எவ்வளவு ஞானத்தைக் கொடுத்திருக்கிறார் என்று ரோஸி அக்கா ஆச்சரியப்பட்டாங்க. தன் குட்டிகளுக்கு எங்கே உணவு கிடைக்கும் நாம எப்படி சாப்பிடப் போறோம் என்ற கவலையே அந்த பூனைக்கு கிடையாது. பார்த்தீங்களா குட்டீஸ்.
நீங்களும் இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்பே உங்களைக் குறித்து அழகான திட்டத்தை இயேசப்பா வைத்திருக்காங்க. உங்க தேவைகளை எல்லாம் அறிந்திருக்கிறார். சாப்பாடு இல்லை, நல்ல டிரஸ் கூட இல்லையே, எதிர்காலம் எப்படியிருக்குமோ என்று எதை நினைத்தும் கவலைப்படத் தேவையில்லை.
நான் நினைத்தது நடக்கலையே! நான் ஆசைப்பட்டது கிடைக்கலையே என feel பண்ணவும் தேவையில்லை. நீங்க செய்ய வேண்டியதெல்லாம் முதலாவது ஆண்டவரை தேட வேண்டும். தினமும் அவரோடு பேச வேண்டும். அப்பொழுது உங்க தேவையெல்லாம் அவர் பார்த்து கொள்வார். இயேசப்பாவை நீங்க தேடினால், தேவையெல்லாம் உங்களைத் தேடி வரும் ok தானே!
- Mrs. கிரேஸ் சுரேஷ்குமார்
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250