Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  02-04-2022
Share:

By Village Missionary Movement

Saturday, 02-Apr-2022

இன்றைய தியானம்(Tamil)  02-04-2022

பத்து ஒழுங்குகள் 

“சகலமும், நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது” - 1கொரி 14:40

இங்கிலாந்தை அசைத்த தேவ மனிதர் ஜான்வெஸ்லி அவர்கள் கிறிஸ்தவர்களுக்கென்று  நியமித்த  பத்து ஒழுங்குகளை இன்று  காண்போம்.

1.    ஊக்கமும் சுறுசுறுப்பும் உள்ளவனாயிரு. ஒரு போதும் சும்மாயிராதே. உன் கரங்கள் எப்போதும் ஏதாவது ஒரு பயனுள்ள வேலையில்  ஈடுபட்டிருக்கட்டும். காலத்தை வீணாக்காதே. தேவையான இடத்தில் அவசியமான அளவு  நேரத்தை விட எவ்விதத்திலும் கூடுதலான  நேரத்தை செலவிடாதே.

2.    எதிர்பாலருடன் உரையாடுகையில் உன் உரையாடல் மிகவும் சுருக்கமானதாகவும், குறுகிய நேரமுடையதாகவும் இருக்கட்டும்.  முக்கியமாக இளம் வயதிலுள்ளோரிடம் நீ சம்பாஷிக்கையில் மிகவும்  ஞானத்தோடு நடந்துகொள்.

3.    “கர்த்தருக்குப் பரிசுத்தம்“ என்பதே உன் வாழ்வின் சட்ட  வாக்கியமாய் இருக்கட்டும். எல்லா வெதுவெதுப்பையும், கேலி  பேசுதலையும் முட்டாள்தனமான பேச்சையும் உன்னை விட்டு அகற்று. 

4.    கிறிஸ்துவுக்குள் உன்னை விட அனுபவமுள்ள சகோதரர்களிடம்  ஆலோசனை கேட்காமல் உன் திருமண காரியத்தில் எந்த முடிவும் எடுத்துவிடாதே. 

5.    எந்த மனிதனைக் குறித்தும் தீமையானதை பேசாதிரு. உன்  வார்த்தைகள் கேன்சரைப் போல அரித்துப்போடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்.

6.    யாரிடமாவது தவறைக் கண்டால் உடனடியாக நேருக்குநேர் சுட்டிக் காட்டு. உன் மனதிலிருந்து பகை என்னும் நெருப்பை மிகச் சீக்கிரம் எடுத்துப் போடு.

7.    பாவத்தைத் தவிர வேறு எதற்கும் வெட்கப்படாதே.

8.    அழியும் ஆத்துமாக்களைக் காப்பதே உன் தலையாய கடமை. எனவே இதற்காக நீ செலவு செய்வதுடன் செலவு செய்யப்படவும் ஆயத்தமாயிரு.

9.    எல்லாவற்றையும் குறிப்பிட்ட நேரத்தில் செய். எல்லாவற்றிலேயும் ஒழுங்கை கடைபிடி. அவைகளைத் தேவ கோபாக்கினைக்கும் சபையின் கட்டுப்பாட்டுக்கும் பயந்து அல்ல, மனசாட்சியினிமித்தம் பற்றிக்கொள்.

10.    பல தடைவைகள் பிரசங்கிப்பது மட்டும் உன் கடமையல்ல, எத்தனை ஆத்துமாக்களை மீட்க முடியுமோ அத்தனைபேரையும் மீட்டு அவர்களை மனந்திரும்புதலுக்கு நேராக வழிநடத்து.

ஜெபக்குறிப்பு: 
நமது மிஷனெரிகள்  ஒவ்வொருவருடைய பிரயாணங்களில்  தேவன் பாதுகாப்பைக் கட்டளையிட ஜெபியுங்கள்.

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al