Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  01-04-2022
Share:

By Village Missionary Movement

Friday, 01-Apr-2022

இன்றைய தியானம்(Tamil)  01-04-2022

கிறிஸ்துவின் பாடுகளில் தேவ அன்பு

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனைத்… தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” - யோவான் 3:16    

1963ம் ஆண்டுvotion அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி  சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்து நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவரது சகோதரர் ராபர்ட் கென்னடி போட்டியிட்டார். ஒருநாள் தேர்தல் கூட்டம் ஒன்றில் அவர் பேசிக்கொண்டிருந்த போது அவரும் சுட்டுவீழ்த்தப்பட்டார். அவர் இரத்த வெள்ளத்தில் மிகுந்த வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் மூடியிருந்தன. அந்த நேரத்திலும் தன்னை சூழ்ந்திருந்த நண்பர்களை தொட்டுப் பார்த்து எல்லோரும் பத்திரமாக இருக்கிறீர்களா? என்று கேட்டாராம். எத்தனை கரிசனை பாருங்கள். சில நிமிடங்களில் அவரும் மரித்து விட்டார்.  உலக மனிதரான அவரே இவ்வளவு அன்பு கொண்டிருப்பாரானால், உங்களையும் என்னையும் உண்டாக்கின, வானத்தையும் பூமியையும் படைத்த பிதாவாகிய  தேவனுடைய அன்பு எவ்வளவு பெரியது என்பதை உணர்த்துவதுதான் இயேசுகிறிஸ்து சிலுவையில் பட்ட பாடுகள்!

இயேசு கிறிஸ்து என்ன பாடுகள் பட்டார் என்பதை சற்று  சிந்தித்துப் பார்ப்போமானால் அவர் நமக்காக வாரினால் அடிக்கப்படும்படி தன்னை  ஒப்புக்கொடுத்தார். ரோமர்கள் தண்டனை கொடுப்பதற்காகப் பயன்படுத்திய  வாரின் நுனியில் ஆணி, சிறு இரும்பு குண்டு இணைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அடியின் போதும் சதையைப் பிய்த்துக் கொண்டுவரும். அவரது முதுகு உழுத நிலம் போல ஆயிற்று. முட்கிரீடத்தை தலையில் வைத்து அடித்தார்கள். தலையில் வைக்கப்பட்ட கூரான முட்களால் பின்னப்பட்ட முட்கிரீடம் சித்திரவதையின்  உச்சகட்டத்தை காண்பித்தது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இயேசு கிறிஸ்து காயப்படுத்தப்பட்டார்.

பிரியமானவர்களே! நாம் பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும், வியாதியிலிருந்தும் மீட்கப்படும்படியாக நமக்காக சிலுவையில்  தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். இயேசு கிறிஸ்துவின் இத்தனை பாடுகளுக்கும் காரணம் பிதாவாகிய தேவன் நம்மீது கொண்ட அன்பு மட்டுமே!  இயேசு கிறிஸ்துவின் பாடுகளுக்கு முன்னால் நம்முடைய பாடுகளெல்லாம் மிகவும் சொற்பம். இயேசு கிறிஸ்து பாடுகளை சகித்துக் கொண்டதினிமித்தம் பிதாவின் அன்பை அறிந்து கொள்ள முடிகிறது. அதுபோல நமக்கு நம்முடைய குடும்பத்திலிருந்தோ, உறவினர்களிடமிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ பாடுகள் வரும்போது அதை நாம் சகித்துக் கொள்ளும்போது, அதன்மூலம் கிறிஸ்துவின் அன்பை அவர்களும் அறிந்து கொள்வார்கள். பாடுகளை சகித்துவாழ நம்மை அர்ப்பணிப்போம். ஆண்டவருடைய அன்பை அறிவிப்போம்!
-    Bro. சிவா

ஜெபக்குறிப்புகள்: 
இம்மாதம் முழுவதும் நடைபெறுகிற ஊழியங்களில் தேவன் தம்முடைய  வல்லமையை விளங்கப்பண்ண ஜெபியுங்கள்.

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet