Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  31-03-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 31-Mar-2022

இன்றைய தியானம்(Tamil)  31-03-2022

பட்சத்தில் வருவார்கள்                                

“…எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்.” - ஏசாயா 54:15

ஒரு ஊரில் பணபலமும் , அதிகாரபலமும் உள்ள ஒரு மனிதர் இருந்தார் . அவர் தன் மூத்த சகோதரனுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் விரோதமாக செயல்பட்டு அவர்கள் குடும்பத்திற்கு தீமையான காரியங்களை செய்து கொண்டே வந்தார்.  அவர்களை அவமானப்படுத்துவது, அவர்களிடம் காரணமில்லாமல் சண்டை போடுவது,  அவர்களுக்கு விரோதமாய் காரியங்களை செய்ய தன்னுடைய ஆட்களிடம் பணம் கொடுத்து நற்பெயரை கொடுப்பது போன்ற பல காரியங்களை பல வருடங்களாய் செய்து கொண்டே வந்தார். காரணம் அவரை விட யாரும் பெரிய அளவில் வந்துவிடக் கூடாது வசதி படைத்தவர்களாய் மாறிவிடக் கூடாது என்பதற்காக! ஆனால் வருடங்கள் உருண்டோடின. அவர் வியாதிப்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு வந்துவிட்டார் . பின்பு தன் தவறை உணர்ந்து தன் மூத்த சகோதரனிடம் வந்து நான் உங்களுக்கு விரோதமாகவும் உங்கள் பிள்ளைகளுக்கு விரோதமாகவும் அநேக தீமைகளைச் செய்துவிட்டேன் என்று சொல்லி என்னை மன்னித்துவிடுங்கள் என்றார் . அந்த மூத்த சகோதரன் தேவன் உன் குற்றத்தை மன்னிப்பாராக என்று சொல்லி அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டார்.

இதைப்போல் வேதாகமத்தில் ஈசாக்கு ஆதி. 26:14 வசனத்தில் பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமை கொண்டு ஆதி 26: 15 ல் துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப் போட்டார்கள். இப்படி இரண்டு முறை வந்து ஈசாக்கின் வேலைக்காரிடம் வாக்குவாதம் பண்ணினார்கள்.  ஆனால் இவர்கள் அதைவிட்டு மூன்றாவது துரவையும் தோண்டினார்கள் இப்போது வாக்குவாதம் செய்யவில்லை. இப்படி ஈசாக்குக்கு விரோதமாக பெலிஸ்தர் பகைத்து தீமையான காரியங்களைச் செய்து வந்தார்கள். ஆனால் பின்பு ஆதி 26:28-29 வசனத்தில் ஈசாக்கிடம் வந்து கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்றும் நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கபட்டவர் என்றும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தார்கள்.
    
என் அன்பு சகோதர சகோதரிகளே! ஒரு வேளை உங்களுக்கும் கூட இதைப்போல் காரணமில்லாமல் சிலர் உங்களுக்கு விரோதமாக காரியங்களை செய்யலாம், பேசலாம் , பயப்படாதேயுங்கள் ! கலங்காதிருங்கள் ! நீங்களும் ஈசாக்கைப் போன்று அவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். சண்டையிடவேண்டாம் . கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்றும் உங்களை ஆசீர்வதிக்கிறார் என்றும் அவர்கள் கண்டு உங்களிடம் வருவார்கள்.  உங்கள் பட்சமாவார்கள். உங்களைக்கொண்டு அவர்களை ஆசீர்வதிப்பார்.  ஆமென் 
-    A இம்மானுவேல் 

ஜெபக்குறிப்பு: 
மீடியா ஊழியங்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கப்பட ஜெபியுங்கள்.

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking