Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  30-03-2022
Share:

By Village Missionary Movement

Wednesday, 30-Mar-2022

இன்றைய தியானம்(Tamil)  30-03-2022

காண்கிற தேவன் 

‘’…தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்” - ஆதியாகமம் 16:13
    
பிரான்ஸ் தேசத்தின் பிரம்மாண்டமான தேவாலயத்திலிருந்து ஒரு சிற்பிக்கு வேலை கொடுக்கப்பட்டது.  அது என்னவென்றால், கானா ஊர் கலியாண வீட்டில் நடந்த அற்புதத்தை பளிங்கு கற்களிலே செதுக்கும்படியான வேலை கொடுக்கப்பட்டது.  அந்த சிற்பி  இரவும் பகலும் உறங்காமல் செதுக்கினார். இதனை அவர் மகன் பார்த்துக் கொண்டிருந்தான்.  அந்த தேவாலயத்திற்கு சிற்பியும் அவரது மகனும் சென்ற போது 20 அடி உயரத்தில் சிற்பி செதுக்கிய சிற்பம் வைக்கப்பட்டிருந்தது. உடனே அவரது மகன் இவ்வளவு உயரத்தில் வைக்கவேண்டுமென்றால் சாதாரணமாக செய்திருக்கலாமே என்றான்.  சிற்பி  மகனின் தோளைத் தட்டிக் கொடுத்து,  “மகனே,  இதை ஜனங்கள் பார்க்கிறார்களோ இல்லையோ என் தேவன் என்னைப் பார்க்கிறார். எனக்குக் கொடுத்த வேலையை நான் மனப்பூர்வமாய், நன்றாக செய்துவிட்டேன்”  என்றார். 
      
ஆபிரகாமுக்கு குழந்தை இல்லாததால் சாராள் தன் அடிமைப் பெண்ணாகிய ஆகாரைக் கொடுக்கிறாள்.   ஆகார் கர்ப்பவதியானாள். கர்ப்பவதியானதும் சாராள், ஆகார் என்னை அற்பமாய் எண்ணுகிறாள் என்று  சொல்லி ஆகாரை மிகவும் கடினமாய் நடத்தினாள். ஆகாரினால் இதனைத்  தாங்க முடியாமல் வேதனைப்பட்டு இந்த பாடுகளிலிருந்து தப்பிக்க எண்ணி தன் எஜமாட்டியை விட்டு ஓடினாள்.  அப்பொழுது ஒரு தூதன் வனாந்தரத்திலே சூருக்குப் போகிற வழியில் அவளை சந்தித்தார் . உடனே ஆகார் , கர்த்தரை நானும் கண்டேன் என்று சொல்லி “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று பேரிட்டாள்.
       
ஆம் பிரியமானவர்களே! என்னைக் காண ஓருவரும் இல்லையென அங்கலாய்த்து உள்ளீர்களோ?  கவலையோடு , துக்கத்தோடு இந்த சூழ்நிலையிலிருந்து எவ்வாறு தப்புவது என கலங்கியிருக்கிறீர்களோ?  ஆகாரைக்  கண்ட தேவன் இன்று உங்களையும் காண்கிறார்,  மனிதர்கள் உங்களை அற்பமாய் எண்ணினாலும் , புறக்கணியாத கர்த்தர், உங்களைக் கொண்டு செய்யும் திட்டம் பெரியது . அது வரை பொறுமையாய் இருங்கள். அவர் உங்களைக் காண்கிறவர் என்பதை மறவாதீர்கள் . காண்கிற தேவனின் கரத்தில் அர்ப்பணித்து காத்திருங்கள். தேவன் பெரிய காரியங்களைச் செய்வார்.   
-    Mrs.ரூத் அனீஸ்

ஜெபக்குறிப்பு:  
மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாக ஊழியம் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al jojobet giriş jojobet casibom giriş bets10 extrabet royalbet süperbetin jojobet casibom holiganbet galabet matbet matbet giriş hilbet bahiscasino celtabet antikbet betoffice