Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  29-03-2022
Share:

By Village Missionary Movement

Tuesday, 29-Mar-2022

இன்றைய தியானம்(Tamil)  29-03-2022

திட அஸ்திபாரம் கிறிஸ்துவே 

“அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது.’’ - எபேசியர் 2: 21 

200  ஆண்டுகளுக்கு முன்பாக இத்தாலியில் கட்டப்பட்ட சாய்ந்த கோபுரமாகிய பைசா கோபுரம்,  கட்டி முடிப்பதற்கு முன்பே சாய ஆரம்பித்தது.  இதன் காரணம் என்னவென்றால், சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டதும் ,ஆறுகள் இரண்டு அங்கு  ஓடுவதால் தண்ணீர் அரித்து மணலாக இருக்கும் இடத்தில் அஸ்திபாரம் போடப்பட்டதுமே!  ஆகவே உறுதியில்லாமல் முதல் மூன்று அடுக்குகள் கட்டப்பட்டதுமே  கோபுரம் சாய ஆரம்பித்தது.  அதுமட்டுமல்ல போடப்பட்ட அஸ்திபாரமும் பத்து அடி ஆழம் மட்டுமே! சிறிது சிறிதாக சாய்ந்து கொண்டிருக்கும் கோபுரத்தை சரி செய்யாவிட்டால் ஒரு நாள் முற்றிலும் சாய்ந்து போவது உறுதி.   ஒரு கட்டிடத்தின் உறுதி என்பது அதன் அஸ்திபாரத்தை சார்ந்தது. இதைவிட உயர்ந்த கட்டிடங்களும் , கோபுரங்களும் சாய்ந்து போகவில்லையே.  ஏனென்றால் இவற்றின் அஸ்திபாரங்கள் உறுதியாய், ஆழமாய் இருப்பதாலேயே!

இயேசு கிறிஸ்து ஒரு உவமையை சொன்னார். அவர் சொல்லியிருக்கிற வார்த்தையின்படி கேட்டு அதன்படி செய்கிறவன் கன்மலையாகிய கிறிஸ்துவுக்குள் தன் வீட்டைக் கட்டுகிறான்.  அப்போது எந்த புயல் வந்தாலும், எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், எத்தனை பாடுகள் வந்தாலும் , அந்த வீடு அப்படியே நிற்கும்.  அது சாய்ந்து போவதில்லை.  அஸ்திபாரத்தின்மேல் போடப்பட்டிருப்பதால் அது அசையாது . நம் இருதயமாகிய கர்த்தருடைய ஆலயம் கர்த்தருடைய வீடு ஒரு அழகான மாளிகையாக உருவாக வேண்டுமென்றால் அது அப்போஸ்தலர் உபதேசத்தில் நிலைத்திருந்து கன்மலையாகிய கிறிஸ்து என்னும் அஸ்திபாரத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.  அவர்மேல் கட்டப்பட்ட வீடு என்றென்றும் நிலைத்திருக்கும் . மற்றவை விழுந்து அழிந்து போகும்.
  
பிரியமானவர்களே ! பணத்தின்மீதோ, அழகின் மீதோ உறவுகளின் மீதோ, நண்பர்களின் மீதோ நம்பிக்கை வைத்து கட்டப்படும் வீடுகள் நாளடைவில்  புயல் வரும்போதோ, பலமான பிரச்சனைகள் போன்ற காற்று வீசும்போதோ இடிந்துபோகும். கிறிஸ்துவே நம் வாழ்வின் அஸ்திபாரமாக இருப்பாராக. வேறு எந்த அஸ்திபாரமும் உறுதியானது அல்ல.  அவரை அஸ்திபாரமாக வைத்துக் கட்டப்படும் வீடு என்றும் நிலைத்திருக்கும்.  நம் குடும்பங்கள் ஒவ்வொன்றும் அப்படியே கட்டப்பட்டிருப்பதாக. பிசாசானவன் வந்து அவற்றை கவிழ்த்துப் போட வகை தேடினாலும் அது இடிந்து விழாது. அசையாமல் நிற்கும். அப்படித்தான் விசுவாசமுள்ள கர்த்தர் மேல் கட்டப்பட்ட வாழ்க்கையாக அசைக்க முடியாததாக நம் வாழ்வு இருக்கட்டும்.
-    Bro. ஹனீஷ் சாமுவேல்

ஜெபக்குறிப்பு: 
நம் ஊழியத்தில் உள்ள 790 ஊழியர்களின் சுகம் மற்றும் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet