Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  27-03-2022
Share:

By Village Missionary Movement

Sunday, 27-Mar-2022

இன்றைய தியானம்(Tamil)  27-03-2022

Jesus-க்கு என்ன பிடிக்கும்? 

‘’பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.‘’ - நீதிமொழிகள் 12:22

Hello, குட்டி செல்லங்களே! How are you? சுகமா இருப்பீர்கள் என்று இயேசப்பாவுக்குள் நம்புகிறேன் . Jesus-க்கு பிரியமாய் வாழும்போது Jesus சந்தோஷப்படுவாங்க இல்லையா! ஒவ்வொருநாளும் Jesus-க்கு பிடித்ததை செய்தோமா? என்று உங்களை நீங்களே Check பண்ணி பார்க்கணும்.  சரிதானே! செய்வீங்களா? சரி கதை கேட்போமா? 

Bus- ல Travel பண்ண யாருக்கெல்லாம் பிடிக்கும்,  ஓ... எல்லாருக்குமே பிடிக்குமா? ஜன்னல் ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது அதைவிட Super-ரா இருக்குந்தானே. நான்கு நண்பர்கள் சேர்ந்து   Bus - ல் பயணம் பண்ணி School- க்கு Late ஆகவே போவாங்க . இப்படி செய்யக்கூடாது.  இது தப்புதானே ! நண்பன் தவறு செய்யும் போது கண்டிக்கணும் அதுதான் உண்மையான நட்பு.

ஒரு நாள் School- க்கு  late ஆக வந்து விட்டு, பஸ் டயர் பஞ்சர் ஆகிவிட்டது என்று பொய் சொன்னாங்க.  ஆசிரியர் ஒருவர்,  இவங்க செய்கின்றது தவறு என்று புரிய வைக்க நினைத்தார்.  எல்லா மாணவர்களையும் வெளியே அனுப்பிவிட்டு, நான்கு  நண்பர்கள் கையிலும் ஒரு பேப்பர் கொடுத்து எழுத சொன்னார்கள்,  BUS - இல் எந்த டயர் பஞ்சரானது என்று.  என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென முழித்தார்கள்.  உண்மையாக இருந்தால் தானே  எழுத முடியும் , என்ன எழுதியிருப்பாங்கன்னு நினைக்கிறீங்க. மாறி,  மாறி தவறாக எழுதியிருப்பாங்க அப்படித்தானே!   ஆசிரியர் உண்மையை கண்டுபிடித்ததை எண்ணி நான்கு பேரும் தலைகுனிந்து நின்றார்கள்.  ஆசிரியர் அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள்.  நான்கு பேரும் தங்கள் தவறை உணர்ந்தவர்களாய் ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டார்கள்.  அடுத்து சரியான நேரத்திற்கு  School-க்கு வர ஆரம்பித்தார்கள். பொய் பேசுவதை தவிர்த்து நல்ல பிள்ளைகளாய் வாழ முயற்சி செய்வோம் என்று நண்பர்கள் பேசிக்கொண்டதைக் கேட்ட ஆசிரியர் மிகவும் சந்தோஷமடைந்தார்.  
   
அருமையான தம்பி தங்காய்,  பொய், திருட்டு, கெட்ட வார்த்தை, இப்படி சின்ன சின்ன தவறுகள் செய்திருக்கலாம். அது இயேசப்பாவை துக்கப்படுத்தும் . அதை விட்டு விட முயற்சி செய்து இயேசப்பாவை சந்தோஷப்படுத்தணும் .Ok Bye.
-    Mrs. ஜீவா விஜய்

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al