Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  26-03-2022
Share:

By Village Missionary Movement

Saturday, 26-Mar-2022

இன்றைய தியானம்(Tamil)  26-03-2022

நற்கிரியைகள்
  
‘’…மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது ‘’ - மத்தேயு 5:16

உலகிலேயே மிக மோசமான சிறைச்சாலை என்று சொல்லப்படுவது ‘’சிஸ்சிஸ்’’ சிறைச்சாலை.  காப்பாளரின் மனைவியான  கேதரின் லாஸ் அவ்வப்போது தன் பிள்ளைகளுடன் சிறைச்சாலைக்கு செல்வார். அப்பொழுது ஒவ்வொரு கைதியிடமும் தனியாக ஆர்வம் காட்டினார் . கொலை குற்றத்திற்காக சிறையிலடைக்கப்பட்ட கைதி ஒருவர் பார்வை இல்லாதவராய் இருப்பதைக்கண்டு, பிரெயில்  எழுத்துக்களை வாசிக்க கற்றுக் கொடுத்தார்கள். மேலும் காது கேளாத,  பேச்சிழந்த ஆறு கைதிகளுக்கு மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எப்படி தகவல் பரிமாறிக் கொள்வது  என்பதை கற்றுக் கொடுத்தார்கள்.  இதே போன்று கைதிகளின் தேவையறிந்து ஊழியம் செய்து வந்தார். எதிர்பாராதவிதமாக ஒரு கார் விபத்தில் கேதரின் இறந்தார் என்ற செய்தியைக் கேட்டதும்  அனுமதியைப் பெற்றுக் கொண்டு 100 கைதிகளும் வந்து கேதரினைப் பார்த்துவிட்டு கண்ணீர் விட்டனர். 
 
இதே போல வேதத்திலும் யோப்பா என்னும் பட்டணத்தில் இருந்த தொற்காள் என்ற பெண்ணும் கூட தான் இருந்த இடத்தில் உள்ள மக்களுக்கு அநேக உதவிகளை செய்திருந்தாள்.  பல விதவைகளுக்கு ஆதரவாய் உதவிகள் செய்ததோடு அங்கிகளையும், வஸ்திரங்களையும் செய்து கொடுத்திருந்தாள். அவள் இறந்ததும் அவளைக் குளிப்பாட்டி வைத்து விட்டு அழுகின்றனர்.  அவள் தங்களுக்கு தந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் வைத்துக் கொண்டு அழுகையோடு பேதுருவை வரவழைக்கின்றனர்.  பேதுரு வந்து ஜெபித்ததும் உயிர் பெற்று எழுகிறாள்.  இந்த தொற்காள் தனக்கிருந்த வேலையின் மத்தியிலும் அநேகருக்கு நற்கிரியைகளைச் செய்தாள். அதனால் அவள் கீர்த்தி அல்லது அவளது வெளிச்சம் யோப்பா பட்டணம் முழுவதும் வீசியது.

இதனை வாசிக்கும் அன்பரே,  அவசரமான உலகத்தில் நாம் வாழ்கிறோம் . இன்று அநேகருக்கு தன் வீட்டின் அருகில் இருப்பவரைப் பற்றிக் கூட தெரியாது.   அவ்வாறு  இல்லாமல் கேதரினைப் போல,  தொற்காளைப்போல மற்றவர்களின் தேவையறிந்து அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும் . நாம் நற்கிரியைகள் செய்யும்போது கிறிஸ்துவின் அன்பைச் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் வாழ்ந்து காட்டுகிறோம்.  இதனால் பலர் கிறிஸ்துவிடம் வழிநடத்தப்படுவர். நாம் செலவிடும் நேரங்கள், பணம் , பொருள் எல்லாம் ஆத்துமாக்களாய் நமக்குக் கிடைக்கும் . ஆத்துமாக்கள் பரலோக பொக்கிஷங்கள் அல்லவா?  நற்கிரியை செய்வோம் பரலோகப் பொக்கிஷங்களை சேர்ப்போம்.
-    Mrs. .அன்பு ஜோதி ஸ்டாலின்

ஜெபக்குறிப்பு: 
கெத்செமனே வளாகத்தில் நடைபெறும் மருத்துவமனை ஊழியங்களுக்காக ; ஒவ்வொருவரும் ஆத்தும இரட்சிப்பைப் பெற  ஜெபியுங்கள்.

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet