Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  23-03-2022
Share:

By Village Missionary Movement

Wednesday, 23-Mar-2022

இன்றைய தியானம்(Tamil)  23-03-2022

தேவன் பெரியவர்

“…உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” – 1 யோவான் 4:4  

ஒரு சிறுவன் தன் தாத்தாவுடன் ஆகாய விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான் . நீண்ட பயணமாக இருந்தபடியால் தன் பையிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். இவனுக்கு அருகில் அமர்ந்திருந்தவர், ஒரு வேதாகமக் கல்லூரி பேராசிரியர். அவன் என்ன புத்தகத்தை வாசிக்கிறான் என்று எட்டிப்பார்த்தார். அது வேத புத்தகமாயிருந்தது. இவர் மிகவும் சந்தோஷப்பட்டார். அவனிடம் சற்று நேரம் செலவிடலாம் என்று நினைத்து “தம்பி, தேவனால் செய்யமுடிந்த ஒரு பெரியகாரியத்தை சொல்லு, அது சரியாக இருந்தால் நல்ல ஒரு பெரிய ஆப்பிள் பழம் தருகிறேன்” என்றார். அந்த சிறுவன் வேதாகமத்தை  மூடிவிட்டு சற்று சிந்தித்து விட்டு, “ஐயா நான் உங்களிடம் ஒரு காரியம் கேட்கிறேன், தேவனால் செய்ய முடியாத பெரிய காரியம் ஏதாகிலும் இருந்தால் சொல்லுங்கள் நான் உங்களுக்கு என் தாத்தாவிடம் சொல்லி ஒரு பெட்டி நிறைய ஆப்பிள் பழங்களை வாங்கித் தருகிறேன்” என்றான்.   

நாம் வணங்கும் தேவன் சர்வ வல்லமையுடையவர். அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். இவ்வளவு பெரிய உலகத்தைப் படைத்த தேவனை நமது இரட்சகராக  கொண்டிருக்கிறோம். செங்கடலை இரண்டாக பிளந்தவர், யோர்தான் நதியை பின்னிட்டு ஓடச்செய்தவர், காற்றையும் கடலையும் அதட்டி அமைதலாக்கினவர். குஷ்டரோகிகளை சொஸ்தமாக்கினவர், செவிடர்களை கேட்கச் செய்தவர், ஊமையை பேசச்செய்தவர், குருடர்களை பார்க்கச் செய்தவர், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினவர் அவர் சொல்கிறார், “நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” என தேவன் கேட்கிறார் (எரே. 32:27). 

பிரியமானவர்களே! இன்று உங்களுக்கு ஒரு அற்புதம் தேவைப்படுகிறதா? அனுதினமும் உங்கள் வாழ்க்கையில் போராட்டமாக இருக்கிறதா? பிரச்சனைகளைக் கண்டு சோர்ந்துபோய் உள்ளீர்களா? பிள்ளைகளை நினைத்து கலங்கிப்போய் இருக்கிறீர்களா? கடன் பிரச்சனையில் என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறீர்களா? எதற்குமே கவலைப்படாதீர்கள். இந்த பிரச்சனை எல்லாவற்றையும் மாற்றக்கூடிய ஒரு பெரிய தேவன் உங்களோடு இருக்கிறார். உங்கள் பிரச்சனையை அவரிடம் சொல்லுங்கள், முழுமையாய் அவரை நம்புங்கள். உங்கள் துக்கத்தை சந்தோஷமாக அவர் மாற்றுவார். ஆமென். 
-    P.சிவா

ஜெபக்குறிப்பு:
அலுவலகப் பணிக்கு கம்ப்யூட்டர், லேப்- டாப் மிகவும் அவசரமாக தேவைப்படுகிறது. கொடுக்கும் உள்ளங்கள் எழும்ப ஜெபியுங்கள்.

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al