Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  23-01-2021
Share:

By Village Missionary Movement

Saturday, 23-Jan-2021

இன்றைய தியானம்(Tamil)  23-01-2021

புழுக்களை சாகடிப்போம் 

“...தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” – 1கொரி.10:12

நான் எவ்வளவு பெரிய மரம். பல ஆண்டுகளாக செழித்து தழைத்து பசுமையாக இருந்தேன். நானே பறவைகளின் கூடும், சிறுபிள்ளைகள் விளையாடும் மைதானமும், வழிப்போக்கர்கள் எனது நிழலில் ஓய்வெடுக்கும் இடமாகவும் இருந்தேன். காற்றோ, மழையோ, வெயிலோ, புயலோ எந்த கால சூழ்நிலையிலும் தாக்குப்பிடித்து நின்றேன். நான் எல்லாருக்கும் மகிழ்ச்சியுள்ள மரமாக இருந்தேன். கொஞ்ச காலம் சென்றது, என்னுடைய வலுவினை நான் இழப்பதுபோல எனக்கு தோன்றியது. ஆரம்பத்தில் நான் அதைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக என் வலிமையை இழந்து சில நாட்களில் கீழே விழுந்து விட்டேன். நான் விழுந்தது எப்படியென்று சிந்தித்தேன். பின்பு தான் புரிந்தது எந்த பெரிய சூழ்நிலையையும் சமாளித்த நான் சிறிய புழுக்களால் விழுந்து விட்டேன் என்று! உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், சில சிறிய புழுக்கள்தான் அரித்து என்னை வலுவிழக்கச் செய்துவிட்டன. 

ஆம், இது சிறிய காரியம்தானே என்று நாம் விடும் சில காரியங்கள்தான் நம் ஆவிக்குரிய வாழ்வை வலுவிழக்கச் செய்கிறது. வேதத்திலும் கூட யூதாஸ்காரியோத்தைப் பற்றி அறிந்திருக்கிறோம். அவனுடைய விழுகை ஒரே நாளில் உண்டானதல்ல. பண ஆசை என்கிற புழு அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக கீழே விழத்தள்ளியது. முடிவில் பிசாசு அவனை முற்றிலும் நிரப்பிவிட்டான். காரணம், ஆரம்பத்தில் அவன் சரிப்படுத்தாத காரியமே! இறுதியில் குற்றமில்லா இரத்தத்தைக் காட்டிக்கொடுத்தேனே என்கிற குற்றமனசாட்சி அவனைக் கொன்று போட்டது. 

ஆம், பிரியமானவர்களே! அந்த மரத்தால் பூச்சியின் அரிப்பை தடுக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் நாமோ தேவனை அறிந்தவர்கள், வசனம் தரும் விடுதலையைத் தெரிந்தவர்கள். இருப்பினும் இது என்னுடைய சிறிய பெலவீனம்தானே எனவே தேவன் இதையெல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார் என்று போக்கு சொல்லுகிறவர்களாக இருக்க வேண்டாம். நாம் அலட்சியப்படுத்தும் சிறுகாரியங்களே பெரிய ஆவிக்குரிய அழிவைக் கொண்டுவரும். நம்மை வீழ்த்த நினைக்கும் அந்த சிறு புழுக்களை சாகடிப்போம். தேவ பலத்தோடு அவரில் நிலைத்திருப்போம், சாட்சியாக வாழ்வோம். 
-    Bro. பால் ஜெபஸ்டின் 

ஜெபக்குறிப்பு:
மீடியா ஊழியங்களுக்கு இன்றும் அநேக Equipment தேவையாக உள்ளது. உதவும் உள்ளங்கள் எழும்ப ஜெபியுங்கள்.  

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet