Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  21-03-2022
Share:

By Village Missionary Movement

Sunday, 20-Mar-2022

இன்றைய தியானம்(Tamil)  21-03-2022

நிராகரிப்பு நல்லது

“…உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.” – ஆதியாகமம் 45:5 

நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்க அதிபராக இருந்தபோது ஓர் உணவகத்துக்கு உணவருந்தச் சென்றார். அப்போது அங்கு ஒருவர் ஏதிர் டேபிளில் அமர்ந்து மிகவும் பயத்துடனும் நடுக்கத்துடனும் உணவருந்திக் கொண்டிருந்தார். அதிபரின் காவல் அதிகாரிகள் அந்த நபரின் உடல் மொழியைக் கவனித்து ஐயமுற்று நெல்சன் மண்டேலாவிடம் தெரிவித்தனர். நெல்சன் நிமிர்ந்து அந்த நபரைப் பார்த்தார். அவர் முகத்தில் மெலிதான புன்னகை. “நான் சிறையில் இருந்தபோது அவர் தான் என் சிறைக் காவலர், ஒரு முறை நான் தன்ணீர் கேட்டபோது என் மீது சிறுநீர் கழித்தார். இப்போது விடுதலையாகிவிட்டேன்.அதிபர் வேறல்லவா, நான் அவரை பழிதீர்ப்பேன் என்ற பயத்தில் நடுங்குகிறார்” என்றார். அவரைப் பார்த்து ஒரு சிநேகப் புன்னகையை  வீசிவிட்டு எழுந்து சென்றார்.  

பரிசுத்த வேதாகமத்தில் யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பை இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். எகிப்தின் வீட்டில் போத்திபார் மனைவியினிமித்தமாக சிறையில் அடைக்கப்பட்டார். யோசேப்பு தனது 30-வயதில் எகிப்து தேசத்தின் அதிபதியாக உயர்த்தப்படுகிறார். அப்போது யோசேப்பின் சகோதரர்கள் தாங்கள் இருந்த தேசத்தில் தானிய பஞ்சம் ஏற்பட்டு, தன் சகோதரனாகிய யோசேப்பு தான் அதிபதி என்று அறியாமல் தானியம் கொள்வதற்காக யோசேப்பிடம் வந்தனர். ஆனால், யோசேப்போ அவர்களை தன் சகோதரர்கள் என்று அறிந்துகொண்டார். யோசேப்பிற்குள் தன் சகோதரர்களை பழிவாங்கும் எண்ணமோ, அவர்களை நிராகரிக்கக்கூடிய எண்ணமோ இல்லாதவராய் இருந்தார். ஆனால் யோசேப்பை அவன் சகோதரர்கள் முற்றிலுமாக நிராகரித்துதான் விற்றுப்போட்டனர். 

காழ்ப்புணர்ச்சியும், பழிவாங்கும் குணமும் ஒருவரிடமோ தேசத்திடமோ இருந்தால் வளர முடியாது. அனைவரையும் அரவணைக்கும் குணம் ஒருவரிடம் இருக்குமேயானால் ஒரு சாம்ராஜ்ஜியத்தையே படைக்கலாம். இந்த குணம்  யோசேப்பிற்குள் இருந்தது. இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! உங்களை யாராவது நிராகரித்தால் கவலைப்படாதீர்கள்! பெரும்பாலும் மக்கள் விலையுயர்ந்தவற்றை தான் வாங்க இயலாமல் நிராகரிக்கின்றனர். நாமும் யாரோ ஒரு நாள் செய்த தீமைக்கு பழிவாங்கும் எண்ணமும், காழ்ப்புணர்ச்சியும் இல்லாதவர்களாய் இருப்போம் என்றால் நிச்சயம் தேவன் நம்மை நிராகரிக்காமல் உயர்த்துவார்.    
-    Mrs. சக்தி சங்கர்ராஜ்

ஜெபகுறிப்பு
கழுதைகள் கையேடு என்று ஊழியர்களுக்காக வெளியிடப்படும் மாத இதழ் தவறாமல் அச்சடிக்கப்பட  ஜெபியுங்கள்.

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet