Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  20-03-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 20-Mar-2022

இன்றைய தியானம்(Tamil)  20-03-2022 (Kids Special)

நம்பிக்கையின் தேவன் 

“கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” – எரேமியா 17:7

இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் குட்டீஸ்! கதை கேட்க ready-ஆக இருக்கீங்க போல... கேட்பது மட்டுமல்ல, அதன்படி வாழ முயற்சி செய்யணும்  ok வா. 

ஒரு ஊர்ல இரண்டு நண்பர்கள் இருந்தாங்க. அவர்கள் இரண்டு பேரும் அந்நாட்டு படையில் வீரர்களாக இருந்தாங்க. அதில் ஒருவர் இயேசுவை அறிந்தவர், இன்னொருவர் இயேசுவை அறியாதவர். போரிலே இந்நாட்டு வீரர்கள் தோற்றுப் போனதால எதிரி நாட்டு படைவீரர்கள், இவர்களைப் பிடித்துக்கொண்டு போகும்படி துரத்திக்கொண்டு வந்தார்கள். ரொம்ப தூரம் ஓடிப்போனதில் இயேசுவை அறிந்த நண்பனைக் காணோம். அந்த படையினர் எதிரிகளிடம் பிடிபட்டுவிட்டானோ என கவலையோடு பேசிக் கொண்டிருக்கும்போது இயேசப்பாவை அறியாத நண்பர்  சொன்னார், “என் நண்பன் பத்திரமாய் படையில் வந்து சேர்ந்து விடுவான்” என்று.  எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்? “yes, என் நண்பனுக்கு இயேசுவைத் தெரியும் அவர் பத்திரமாக பாதுகாத்துக் கொள்வார்” என்று நம்பிக்கையுடன் கூறினான். 

எதிரிகள் துரத்திக் கொண்டு வந்ததால் காட்டுக்குள் ஓடி, ஒரு குகைக்குள் ஒளிந்து கொண்டான். இயேசப்பா என் நம்பிக்கையின் நங்கூரமே நீங்கதான் என்று ஜெபித்துவிட்டு உள்ளே பதுங்கி இருந்தான். அங்கே வந்த எதிரி படையினர் ஒவ்வொரு குகையிலும் எதிரி நாட்டு வீரர்கள் ஒளிந்திருக்கக்கூடும் என்று நினைத்து குகைக்குள் சுட்டுக் கொண்டே வந்தனர். குகைக்கு பக்கத்தில் வந்தபோது, படைத்தலைவர், “நிறுத்துங்கள் குண்டுகளை வீணாக்க வேண்டாம். இங்கு யாரும் இருப்பதாக தெரியவில்லை” என்று சொன்னதும் எல்லாரும் அந்த இடத்தை விட்டு கிளம்பி சென்று விட்டார்கள். இயேசப்பா தன்னை காத்துக்கொண்ட அதிசயத்தை எண்ணி ஆண்டவருக்கு நன்றி சொன்னார். ஆம், இயேசப்பாவை நம்புகின்ற எவரையும் அவர் கைவிடவே மாட்டார். 

குட்டி தம்பி - தங்கச்சி, நீங்களும் உங்கள் ஆபத்தான நேரங்களில், உதவி தேவைப்படும்போது  நம்புவதற்கு 100% கேரண்டியான இயேசப்பாவை நோக்கி கூப்பிடுங்கள். அவர் ஒருவரே உங்களை காப்பாற்றவும், உதவி செய்யவும் வல்லவராய் இருக்கிறார். பிறகு என்ன? நம்பிக்கையின் நாயகன் இயேசப்பா இருக்கும்போது பயம் எதுவும் உங்களுக்கு இல்லைதானே குட்டீஸ்.
-    Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet