Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  17-03-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 17-Mar-2022

இன்றைய தியானம்(Tamil)  17-03-2022

கண்கள் பத்திரம் 

“தகப்பனைப் பரியாசம் பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்“ - நீதிமொழிகள் 30:17 

நம்மைப் படைத்த தேவனை பிரியப்படுத்துவதே நம் வாழ்வின் முக்கிய நோக்கம்.  வேத வசனத்தை தியானிப்பதன் மூலம் தேவனுக்கு எது பிரியம் என்பதை கற்றுக்கொள்கிறோம். பெற்ற தாயையும், தகப்பனையும் கனம்பண்ணுவது அதில் மிக முக்கியமானது என்று பத்துக் கட்டளைகளில் காண்கிறோம். (யாத். 20:12) கனப்படுத்துவது என்று சொல்லும்போது அது இருதயத்தில் ஆரம்பித்து சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும். 

பெற்றோரை கனப்படுத்துவதற்கு ஓர் அருமையான உதாரணத்தை சாலொமோனின் வாழ்வில் காணலாம். 1இராஜா. 2:19ல் தன் தாயார் தன்னை பார்க்க வருகிறார் என அறிந்து இராஜாவாகிய சாலொமோன் எழுந்து, எதிர்கொண்டு போய், வணங்கி தன் சிங்காசனம் அருகே ஒரு ஆசனத்தில் அமர வைத்ததை வாசிக்கிறோம். இப்படி கனப்படுத்துபவர்களுக்கு நன்மையையும், நீடிய ஆயுளையும் ஆண்டவர் வாக்குப் பண்ணியிருக்கிறார் (எபேசியர் 6:2, 3) 

பிரியமானவர்களே! நீங்கள் உங்கள் பெற்றோரை கனப்படுத்துவதில் கவனமாயிருக்கிறீர்களா? கனப்படுத்தாவிட்டால் சாபம் என்று உபாகமம் 27:16ல் வாசிக்கிறோம். பெற்றோரை பரியாசம் பண்ணி அசட்டை செய்தால் அப்படிப்பட்டவனின் கண்ணை காகங்கள் பிடுங்கும் என்று நீதி. 30:17ல் வாசிக்கிறோம். அப்படியென்றால், 1யோவான் 2:11ல் “தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்” என்று வாசிக்கிறோம். ஆம், பகை உணர்வு ஒருவனை ஆவிக்குரிய இருளில் தள்ளிவிடுகிறது. வாழ்வின் சமாதானத்தை இழக்கச் செய்து குழப்பமான மனநிலையை இவ்விருள் கொண்டு வருகிறது. பெற்றோரை அசட்டை செய்யும் போதும் இதேபோல் ஆகிறது. அதைத்தான் கண்களை காகம் பிடுங்கும் என்று வேதம் சொல்லுகிறது. அன்பில் நடந்து, பெற்றோரை கனப்படுத்தி ஆவிக்குரிய வெளிச்சத்தைக் காத்துக்கொண்டு நம் கண்களை பத்திரப்படுத்திக் கொள்வோம். 
-    J. சந்தோஷ்

ஜெபக்குறிப்பு:
சங்கிலித்தொடர் ஜெப ஊழியங்களில் இணைந்து ஜெபிக்கும் குடும்பங்களை தேவன் தழைக்கப் பண்ண ஜெபியுங்கள்.      

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet esbet amgbahis betpuan grandpashabet sonbahis mercurecasino betplay cratosroyalbet grandpashabet grandpashabet casibom marsbahis grandpashabet casibom jojobet jojobet casibom superbetin superbetin giriş marsbahis marsbahis giriş almanbahis almanbahis giriş amgbahis amgbahis giriş betasus betasus giriş betmartin betmartin giriş betoffice betoffice giriş jojobet jojobet giriş betpas betpas giriş betsat betsat giriş betsmove betsmove giriş egebet egebet giriş galabet galabet giriş grandpashabet grandpashabet giriş hiltonbet hiltonbet giriş holiganbet holiganbet giriş jasminbet jasminbet giriş kareasbet kareasbet giriş kargabet kargabet giriş kavbet kavbet giriş matbet matbet giriş mavibet mavibet giriş nakitbahis nakitbahis giriş norabahis norabahis giriş pashagaming pashagaming giriş perabet perabet giriş piabellacasino piabellacasino giriş tarafbet tarafbet giriş winxbet winxbet giriş supertotobet supertotobet giriş atlasbet atlasbet giriş