By Village Missionary Movement
Wednesday, 16-Mar-2022இன்றைய தியானம்(Tamil) 16-03-2022
எச்சரிக்கையும் பதிலும்
“...மற்றவர்கள் தூங்குகிறது போல நாம் தூங்காமல், விழித்துக் கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.” – 1தெசலோனிக்கேயர் 5:6
கடந்த வருடங்களிலே பயங்கரமான கொள்ளை வியாதியான கொரோனா உலகெங்கும் பரவி மக்கள் யாவரும் மாஸ்க் அணியவும் அடிக்கடி கை கழுவவும் எச்சரிக்கப்பட்டோம். வான்வழி, தரைவழி, கடல்வழி போக்குவரத்துகள் முடக்கப்பட்டன. கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வியாபார ஸ்தலங்கள் முடக்கப்பட்டன. திருவிழாக்கள், வைபவங்கள், மத வழிபாடுகள் தடை செய்யப்பட்டன. மக்கள் எல்லாரும் மருத்துவர்களும், அரசாங்கமும் கொடுத்த எல்லா எச்சரிப்பிற்கும் சரியானபடி மதிப்பு கொடுத்தோம்.
ஆனால் ஆண்டவர் நமக்குக் கொடுத்த எச்சரிப்பை நாம் எவ்வளவு கவனத்துடன் கருத்தில் கொள்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் தன் நிருபத்தில் எழுதும்போது கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும் பிரதான தூதரோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று கூறுகிறார். இயேசு கிறிஸ்துவின் வருகை நினையாத நாழிகையிலே இருக்கும். இந்த வார்த்தைகளுக்கு நாம் எப்படி மதிப்பு கொடுக்கிறோம். அவரை சந்திக்க ஆயத்தமாயிருக்கிறோமா?
கிறிஸ்துவின் முதல் வருகையில் கிறிஸ்து என்னும் இரட்சகர் பிறந்தார் என்ற செய்தியை நம்பி எவ்வளவு சந்தோஷத்தோடும், ஆரவாரத்தோடும் கொண்டாடுகிறோம். அதேபோல் இரண்டாம் வருகையை குறித்த செய்தியைக் கேட்ட நாம் எவ்வாறு பதில் செய்கிறோம். ஆயத்தப்படுகிறோமா? இதே கொண்டாட்டத்தோடும், சந்தோஷத்தோடும், ஆரவாரத்தோடும் எதிர்கொள்ள ஆயத்தப்படுவோம். ஆயத்தப்படாமல் இருப்போமானால் இயேசு கூறிய பத்து கன்னிமைகள் உவமையில் உள்ள புத்தியில்லாத கன்னிகைகளாய் நாமும் இருப்போம். எனவே புத்தியுள்ள கன்னிகைகளாய் விழித்திருந்து அவர் ராஜ்யத்தை சுதந்தரிப்போம். இத்தனை நாட்கள் வராதவர் இனிமேலா வரப்போகிறார் என தூங்குகிறவர்கள் போல இச்செய்தியை கேட்டும் கேளாதவர்கள் போல இருந்தால் அவரோடு செல்ல முடியாதே! எனவே விழித்துக் கொண்டு கிறிஸ்துவை சந்திக்க ஆயத்தப்படுவோம், அவரோடு செல்வோம்.
- A. பியூலா
ஜெபக்குறிப்பு:
கிராமங்களில் நடைபெறும் சிறுவர், வாலிபர் ஊழியங்களை எதிர்க்கிற ஊழிய எதிர்ப்பாளர்களை தேவன் சந்திக்க ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250