Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  12-03-2022
Share:

By Village Missionary Movement

Saturday, 12-Mar-2022

இன்றைய தியானம்(Tamil)  12-03-2022

உனக்கு என்ன வேண்டும்? 

“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” - மத்தேயு 6:33

வேதபுத்தகத்தில் நாம் பார்க்கும்போது இரண்டு நபர்களிடம் ஆண்டவர் “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கிறார். அவர்கள் கூறிய பதில் ஆண்டவரை மிகவும் பிரியப்படுத்தியது. அதில் முதலாவது நபர் சாலொமோன். சாலொமோன் ஒரு ராஜாவாக இருந்த நிலையில் அவருடைய பலிகளை ஆண்டவர் ஏற்றுக்கொண்டு, அவர் சொப்பனத்தில் தோன்றி அவருக்கு என்ன வேண்டும் என்ற கேள்வியைக் கேட்கின்றார், அவர் நினைத்திருந்தால் செல்வம், அரண்மனை, பிற ராஜ்யங்கள் என எதை வேண்டுமானாலும் கேட்டிருக்கலாம். ஆனால் அவரோ, “உம்முடைய ஜனத்தை நீதியாய் நியாயம் தீர்க்க தேவையான ஞானம் வேண்டும்” எனக் கேட்கின்றார். அது தேவனுக்குப் பிரியமாய் இருந்ததினால் அவர் கேட்ட ஞானத்தோடு கேட்காத செல்வம், சிறப்பு என அனைத்தையும் கொடுக்கின்றார். 

இரண்டாவது நபர் மோசே, அவர் திக்குவாயும், மந்தநாவுமுடைய நபராக இருந்தார். ஆண்டவர் அவரிடம் இடைபடும்போது அவர் தன்னுடைய சரீர குறை மாறவேண்டும் என்றோ, வேறு எந்த உலகப் பிரகாரமான ஆசீர்வாதத்தையோ கேட்காமல், “நான் உமது மகிமையைப் பார்க்க வேண்டும்” என்று தேவன் பிரியப்படும்படியான ஒரு வேண்டுதலைக் கேட்கின்றார். தேவன் அதைத் தனக்கு உகந்ததாகக் கண்டு உடனே மோசேக்குத் தன்னை வெளிப்படுத்துகின்றார். அதுவரை நடக்காத அற்புதங்களையும் அடையாளங்களையும், பெரிய பெரிய காரியங்களையும் செய்யும்படியாக அவரை பயன்படுத்தினார்.

இதை வாசிக்கின்ற தேவ பிள்ளைகளே, நாம் இந்த நாளில் நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம். ஆண்டவர் நம்மிடம் வந்து இந்தக் கேள்வியைக் கேட்கும்போது, நமது பதில் என்னவாக இருக்கும்? உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்களையா அல்லது ஆண்டவருக்குப் பிரியமான, அவருடைய நாமம் மகிமைப்படுகின்ற, அவரை மகிழ்விக்கக்கூடிய காரியங்களைக் கேட்போமா? வேதம் கூறுகிறது “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” எனவே தேவனுடைய ராஜ்யத்தை முதலாவது தேடுவோம், ஆண்டவரைப் பிரியப்படுத்துவோம்.  ஆமென். 
-    S.P. சந்தனபாண்டி 

ஜெபக்குறிப்பு:
ஜெபக்கூடாரம் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவடைய; தேவ நாம மகிமைக்காக பிரதிஷ்டை செய்யப்பட ஜெபியுங்கள்.   

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al