Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  06-03-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 06-Mar-2022

இன்றைய தியானம்(Tamil)  06-03-2022 (Kids Special)

 

உன் ஆசை என்ன?

 

“...பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்” - ஆதியாகமம் 12:3

 

Hello குட்டீஸ்! Regular-ரா school க்கு போயிட்டு இருக்கீங்க இல்லையா? ஒரே Happy தானே, இன்றைக்கு School  story ஒன்று கேட்போமா. படித்த மூன்று பேர் நண்பர்களா இருந்தாங்க. ஒருநாள் ரொம்ப போர் அடிச்சதால walking போனாங்க. நடந்து போய்க்கொண்டே இருக்கும்போது, வயதான பெரியவர் ஒருவர் வந்தார்.  அந்த மூன்று பேரையும் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். என்ன கேள்வின்னுதானே யோசிக்கிறீங்க. அவங்களும் அப்படித்தான் யோசிச்சாங்க... அந்த பெரியவர் உங்களுக்கு என்ன வேண்டும் என்று ஆசைப்படுறீங்கன்னு கேட்டார். முதல் அண்ணனும் இரண்டாவது அண்ணனும் நல்லா படிக்கணும், கல்விமானா ஆகணும்.  அப்போதான் எங்கே போனாலும் வேலை கிடைக்கும் நிறைய சம்பாதிக்கலாம்னு சொன்னாங்களாம். மூன்றாவது அண்ணன் என்ன சொன்னாங்க தெரியுமா? நிறைய பேர் வியாதியோட கஷ்டப்படுறாங்க, வேலை இல்லாம இருக்குறாங்க, கவலையோட இருக்குறாங்க, இவங்களுக்கெல்லாம் உதவி செய்யணும்னு நினைக்கிறேன்னு சொன்னாங்களாம்.

 

அந்த பெரியவர் சரி...சரி நீங்க ஆசைப்பட்டபடியே உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் ஜெபம் பண்ணுங்கன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. அந்த மூன்று பேரும் அப்படியே prayer பண்ணாங்க. சில வருடங்கள் கழித்து அவரவர் ஆசைப்பட்டபடியே கிடைத்துவிட்டது. நிறைய பணம் கேட்ட அண்ணன் “நிம்மதியே இல்லை! நிறைய பணம் இருப்பதால் தூக்கமும் போயிடுச்சு” என்று புலம்பினாங்களாம். கல்விமானாக ஆசைப்பட்ட அண்ணன் நிறைய படித்ததால எந்த வழியில் போகணும்னு குழப்பமா இருக்குன்னு கஷ்டப்பட்டாங்களாம். இரண்டு பேரும் சேர்ந்து மூன்றாவது அண்ணனை பார்க்க போனாங்களாம். இந்த அண்ணன் ரொம்ப சந்தோஷமா இருந்தாங்களாம். உன் சந்தோஷத்துக்கு காரணம் என்னவென்று கேட்டபோது, “வியாதியுள்ளவர்களுக்கு ஜெபித்த போது வியாதி சரியாகுது, கடன் பிரச்சனை உள்ளவங்க, கஷ்டப்படுறவங்க இவங்களுக்கெல்லாம் ஜெபிக்கும்போது அற்புதம் நடக்குது, இதனால எல்லாரும் சந்தோஷமா இருக்குறாங்க. அதனாலதான் நானும் சந்தோஷமா இருக்குறேன்”

-னு சொன்னாங்க. இந்த வழி எங்களுக்குத் தெரியாம போச்சே. தங்களுக்காகவும் ஜெபிக்கும்படி நண்பனிடம் கேட்டுக் கொண்டாங்க. சந்தோஷத்தின் வழியை தெரிந்து கொண்டவர்களாய், தன் நண்பனைப் போலவே மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்க நினைத்தவர்களாய் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தார்கள்.

 

குட்டி செல்லங்களே! மூன்றாவது அண்ணனைப்போல நீங்களும் மற்றவர்களை சந்தோஷப்படுத்துகின்ற வாழ்க்கை வாழவே இயேசப்பா விருப்பப்படுறாங்க நீங்களும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பீங்க தானே. Very very super.

  • Sis. தெபோராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al