Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  04-03-2022
Share:

By Village Missionary Movement

Friday, 04-Mar-2022

இன்றைய தியானம்(Tamil)  04-03-2022

பொய்யான மொழிகள் 

“...உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.” – எபிரெயர் 12:3 

பிரியமானவர்களே! உங்கள் வாழ்க்கையில் குடும்பத்தில், வேலை ஸ்தலத்தில் அல்லது நீங்கள் இருக்கிற எந்த ஸ்தலங்களிலும் நீங்கள் செய்யாத தவறை செய்ததாகவும், நீங்கள் பேசாத வார்த்தைகளை பேசியதாகவும் பொய்யாய் குற்றம் சாட்டுகிறார்களா? கவலைப்படாதிருங்கள். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்” என்று சொன்ன ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களோடு இருக்கிறார். 

ஆம், ஜனத்தின் மூப்பர், பிரதான ஆசாரியர், வேதபாரகர் ஆகிய இக்கூட்டத்தாரெல்லாரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ரோம ஆளுநர் பிலாத்துவிடம் கொண்டுபோய், “இவன் இராயருக்கு வரி கொடுக்க வேண்டுவதில்லையென்று சொல்லி ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம்” என்று குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள் அல்லவா? ஆனால் இயேசு கிறிஸ்துவோ இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்று சொல்லியிருந்தார். இதற்கு மேலும் ஒருபடி சென்று தனக்காகவும் பேதுருவுக்காகவும் வரிசெலுத்தியிருந்தார். காரியம் இப்படியிருக்க, இயேசுவை விரோதித்தவர்கள் பிலாத்துவிடம், இயேசு சொன்ன செய்த காரியத்திற்கு நேரெதிராய் இயேசு கிறிஸ்துவை குற்றஞ்சாட்டினார்கள். எனவே பச்சை மரத்துக்கு இவைகளை செய்தால், பட்ட மரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்று இயேசு சொன்ன வசனத்தை நினைத்து உங்களை தேற்றிக் கொள்ளுங்கள். 

அதே நேரம் ஆண்டவர் உங்களை அப்படியே விட்டுவிட மாட்டார். ஆம், யோசேப்பு பொய்யாய் குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலைக்கு போனாலும் ஆண்டவர் யோசேப்பை விடுவித்ததோடு மட்டுமல்ல உயர்த்தினார். அவர் உங்களுக்கும் அப்படியே செய்வார். ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதபடிக்கு தமக்கு விரோதமாய் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக் கொள்ளுங்கள். 
-    K. பெஞ்சமின் 

ஜெபக்குறிப்பு:
லெந்து கால கூட்டங்களில் சகோ. டேவிட் கணேசன் அவர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al