Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  27-02-2022 (Kid’s special)
Share:

By Village Missionary Movement

Saturday, 26-Feb-2022

இன்றைய தியானம்(Tamil)  27-02-2022 (Kid’s special)

வைரக்கல் 

“அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும்... வேண்டிக்கொள்ளுகிறேன்.” – எபேசியர் 3:19

ஒரு பட்டணத்தில் ஒரு பெரிய பாட்டியம்மா வசதியோடு வாழ்ந்து வந்தாங்க. அவர்கள் daily evening walking போவது வழக்கம்.  Walking முடித்துவிட்டு ஒரு park-ல் உள்ள bench –இல் உட்கார்ந்து சிறுவர்கள் விளையாடுவதை பார்த்து ரசிப்பாங்க. உங்களுக்கும் evening friends கூட சேர்ந்து park-ல் விளையாட ரொம்ப பிடிக்கும்தானே! அங்கே அண்ணன், அக்கா எல்லாரும் பேசிக்கொண்டு ஜாலியா விளையாடுவாங்க. யாரென்று தெரியவில்லையென்றாலும் நீங்களும் சிரித்து சந்தோஷமா விளையாடுவீங்க இல்லையா? பாட்டியம்மாவும் எல்லா குட்டிப்பிள்ளைகளோடும் அன்பாக பேசி பழகுவாங்க. இப்படி பாட்டிக்கு குட்டி பிள்ளைகள் நிறைய பேர் friends ஆகிவிட்டார்கள். அதில் டயானா பாட்டியம்மாவிடம் நன்றாகப் பழகுவாங்க. ஒருநாள் டயானா பாட்டியிடம் நாளை எனக்கு birthday பாட்டி, அப்பா grand –ஆக கொண்டாட போறாங்க. நீங்களும் கண்டிப்பாக வரணும் என்று கூப்பிட்டாள். டயானா பேத்தியை போல ரொம்ப அன்பாக பேசுவதால் பாட்டியும் டயானாவை நேசித்தாங்க.  Birthday அன்றைக்கு டயானாவுக்கு விலையுயர்ந்த வைரக்கல் பதித்த மோதிரம் ஒன்றை ஒரு box-ல் வைத்து பிறந்தநாள் பரிசாக கொடுத்தார்கள். 

Birthday party முடிந்தவுடன் எல்லாரும் சென்ற பிறகு பரிசு பொருட்களையெல்லாம் பிரித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் பாட்டியம்மா கொடுத்த மோதிரத்தைப் பார்த்தாள். டயானா old model ஆக இருக்கிறது. எனக்கு பிடிக்கவில்லையென்று வைத்து விட்டாள். அடுத்த வாரத்தில் அவளது friend  மலர் birthday வந்தது. அவளுக்கு அன்பளிப்பாக பாட்டி கொடுத்த மோதிரத்தை கொடுத்து விட்டாள். மலரின் அப்பா ஒரு நகை வியாபாரி. அந்த வைரக்கல் மோதிரத்தைப் பார்த்ததும் உன்  friend டயானா உன்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள். இவ்வளவு விலையுயர்ந்த மோதிரத்தை உனக்கு பரிசாக கொடுத்திருக்கிறாளே என்று சொன்னார். உடனே மலர், டயானாவுக்கு Phone பண்ணி, நீ தந்த பரிசுக்கு ரொம்ப நன்றி. விலையுயர்ந்ததை எனக்காக கொடுத்து விட்டாயே உன் அன்பை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் என்று சொன்னதும் டயானாவுக்கு பாட்டி ஞாபகம் வந்துவிட்டது. பாட்டியின் அன்பையும் பரிசையும் இழந்து விட்டோமே என்று வருத்தப்பட்டாள். 

என்ன குட்டீஸ், இயேசு கிறிஸ்துவும் தன் உயிரையே நமக்காக கொடுக்குமளவிற்கு நம் மீது அன்பு வைத்திருக்கிறார். பாட்டியின் அன்பை டயானா புரிந்து கொள்ளாததை போல, நாமும் அநேக நேரங்களில் இயேசப்பாவின் அன்பை புரிந்து கொள்ளாமல் மறந்து விடுகிறோமல்லவா? நீங்கள் அவரை மறந்தாலும் இயேசப்பா ஒருபோதும் உங்களை மறக்கவேமாட்டார். இதற்காக Jesusக்கு நன்றி சொல்லிக் கொண்டேயிருக்கணும். Ok, வா. 
-    A. பியூலா

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş