Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  20-02-2022 (Kid’s special)
Share:

By Village Missionary Movement

Sunday, 20-Feb-2022

இன்றைய தியானம்(Tamil)  20-02-2022 (Kid’s special)

கப்பல் போகுது 

“…அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.” – வெளி. 22:12 

அன்பு செல்லங்களே! How are you? சுகமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த வருடம் 2022. மூன்று இரண்டு வந்திருக்கிறது பார்த்தீங்களா?  2020-2021வது வருஷத்தில் எதையெல்லாம் இழந்திருக்கிறீர்களோ அதையெல்லாம் மூன்று மடங்காக இயேசு திரும்பத் தர போகிறார். அடுத்து என்ன ஒரு 0 வந்திருக்குதானே. நம்ம வாழ்க்கையில் வருகிற தீமைகள், வியாதிகள் எல்லாவற்றையும் போ என்றால் உடனே 0 வாக மாறிவிடும் சரியா? Zero ன்னா...ஒன்றுமில்லையென்றுதானே அர்த்தம். 

சரி கதை கேட்போமா? ஒரு Sunday School Teacher பிள்ளைகளிடம் வெள்ளைத்தாளைக் கொடுத்து, “நீங்கள் ஒவ்வொரு வாரமும் கதை கேட்கிறீர்கள் அல்லவா? நீங்க என்ன கற்றுக் கொண்டீர்கள்” என்பதை எழுதி கொடுங்க என்று கூறினார். எல்லாரும் பேப்பரை வைத்து கொண்டு யோசித்தாங்க. ஒரு தம்பி மட்டும் “கடகட”ன்னு எழுதி முடித்தான். என்ன எழுதியிருந்தான் என்று வாசிக்கலாமா?  “என் வாழ்க்கை கப்பல் மாதிரி.  இந்த கப்பலில் விலையுயர்ந்த பொருட்களை ஏற்றி, பல நாடுகளுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். அந்த பொருட்களை பெற்றுக் கொண்டவர்கள் சந்தோஷப்படுவாங்க இல்லையா? அதுபோல என் வாழ்க்கை கப்பலை இயக்குபவர் இயேசப்பா.... எனக்குள் இயேசப்பா நிறைய விலையுயர்ந்த திறமைகளை கொடுத்திருக்கிறார். அதை நான் பயன்படுத்தும்போது, இயேசப்பா சந்தோஷப்படுவாங்க” என்று அந்த தம்பி எழுதி இருந்தான். எல்லோரும் கைதட்டி அவனை உற்சாகப்படுத்தினார்கள். 

உங்களுக்கு நிறைய திறமைகள் இருக்கிறதல்லவா? பாடுவது, அழகாய் எழுதுவது, படம் வரைவது, உபசரிப்பது.... இப்படி உங்களுக்கு இயேசப்பா வித்தியாசமான திறமைகளை கொடுத்திருக்கிறாங்க. ஆனா நீங்க Online class attend பண்ணி விட்டு,  cell phone-ல உபயோகமில்லாததைப் பார்த்து time –ஐ waste பண்ணக்கூடாது.  உங்க திறமைகளை பயன்படுத்தி, அதை பெருக்கிக் கொண்டே இருக்கணும். கப்பலில் இருக்கிற பொருட்கள் பல நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுவதைப் போல, உங்க திறமைகளையும் இயேசுவுக்காய் பயன்படுத்தும்போது, அநேகருக்கு ஆசீர்வாதமாய் மாறுவீர்கள். எப்போதும் cell phone, T.V. யைப் பார்த்துக் கொண்டு உங்க திறமைகளை புதைத்து வைக்க கூடாது. Use பண்ணும்போதுதான் இன்னும் நிறைய திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். அப்படி use பண்ணும்போது உங்க கிரியைகளுக்குத்தக்க பலனை இயேசப்பா தருவாங்க. இயேசப்பாவுக்கு உங்க தாலந்துகளை கொடுக்க ரெடியா? Very good. இயேசப்பாவும் உங்களை பயன்படுத்த ரெடியா இருக்காங்க.   God bless you.
-    Sis. தெபோராள் 

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking