Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  19-02-2022 (God’s creation’s special)
Share:

By Village Missionary Movement

Friday, 18-Feb-2022

இன்றைய தியானம்(Tamil)  19-02-2022 (God’s creation’s special)

பச்சைமுள் பற்றியது 

“அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார்...” – யாத்திராகமம் 3:4

வேதத்திலுள்ள மனிதனோ, மிருகமோ, மரமோ எதன் மூலமும் தேவன் அநேக காரியங்களை கற்றுக் கொடுக்க முடியும் என்று நான் அறிந்திருக்கிறேன். ஆகவே இன்று நான் உங்களுடன் தைரியமாகப் பேசத் துணிந்தேன். முதலில் என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். பொதுவாக யாருக்கும் என்னை பிடிக்காது மிருகங்களுக்கும் கூடத்தான்! ஆகவே என்னை யாரும் நெருங்கவே மாட்டார்கள். ஆனால் ஒரு பெரிய தலைமைத்துவ வேலைக்கு மோசேயை அழைக்க தேவன் என்னையே பயன்படுத்தினார் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நான்தான் முட்செடி! 

Ok, என்னுடன் வாருங்கள் வனாந்தரத்திற்கே செல்வோம். சீக்கிரமா ஏறுங்க, ஏறுங்க... பைலட், கொஞ்சம் விமானத்தை ஸ்லோ பண்ணி தாழ பறக்க விடுங்க. இதுதான் வனாந்தரத்தின் பின்புறத்திலுள்ள ஒரேப் தேவ பர்வதம். இங்குதான் நான் பல ஆண்டுகளாக நின்று கொண்டிருந்தேன். ஒன்று 100 டிகிரி வெயில், இல்ல கொட்டும்பனி, இந்த இரண்டையும்தான் நான் பார்த்து வளர்ந்தேன். சரி, விரைவாக சில காரியங்களை உங்களிடம் சொல்லி விடுகிறேன்...! 1. தேவன் என் மூலம் தம்மை மோசேக்கு வெளிப்படுத்தினார். அதுபோல உங்களை சுற்றியுள்ள மக்கள் உங்கள் மூலம் தேவனை காணமுடியுமா? இயேசுவை வெளிப்படுத்தும் நபராக நீங்கள் இவ்வுலகில் வாழுகிறீர்களா? 2. அக்கினியை நான் ஏற்றுக்கொண்டேன். அதுபோல தேவன் உங்களை நடத்தும் விதம் எதுவானாலும் இதை ஏற்றுக்கொள்வீர்களா? அது சிங்க கெபியாகவோ சூளை நெருப்பாகவோ இருக்கலாம். இது வேண்டாம், என்னால் தாங்க முடியாது என்று அவரிடம் போராடுவீர்களா? உங்கள் வாழ்வில் வரும் கடினமாக சூழ்நிலைகளையும் பொறுமையோடு சகித்தால் நிச்சயமாகவே மகிமையான காரியம் நடக்கும். 

3. நான் மோசேயை என்கிட்ட வரும்படி கவர்ந்திழுத்தேன். அதுபோல நீங்கள் தேவ அன்பிற்கு வெளியேயுள்ளவர்களை கவர்ந்திழுக்கிறவர்களாக காணப்படுகிறீர்களா? உங்களை பார்ப்பவர்கள், மற்றவர்களிடமில்லாத ஒரு தெய்வீக சுபாவத்தை உங்களிடம் கண்டு உங்களை நெருங்கி வருகிறார்களா? அடடா, உங்களிடம் கேள்விகளா கேட்கிறேனா? எனக்கு கேள்வி கேட்பது கை வந்த கலை! காரணம், நான் ஆண்டவரை சந்திக்கும் வரை, ஏன் என் வாழ்வில் முட்கள்? ஏன் இந்த வனாந்தர வாழ்வு? ஏன் இந்த தனிமை? ஏன் இந்த புறக்கணிப்பு? என புலம்பி இருக்கிறேன். என்றைக்கு ஆண்டவரை கண்டேனோ, அன்றே என் கேள்விகள் காணமற்போயின. உங்கள் வாழ்விலும் பல கேள்விகள் உண்டல்லவா? ஆண்டவரை இன்னும் அதிகமாய் அறிய பிரயாசப்படுங்கள். அவரே அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக மாறுவார். இன்னும் கொஞ்சம் உங்களோடு பேச ஆசைதான், ஆனால் நேரம் போதவில்லை. இன்னும் என்னைக் குறித்து அறிய வேண்டுமானால் இன்றைய வேத பகுதியை திரும்ப திரும்ப வாசியுங்கள். Ok, Bye. 
- Bro. ஜான் ஜெயராஜ் 

ஜெபக்குறிப்பு:
கெத்செமனே வளாகத்தில் இரண்டிரண்டு மிஷனெரிகள் தங்கி பயிற்சி பெறுவதற்கு 60 மிஷனெரி அறைகள் கட்டப்பட ஜெபியுங்கள்.  

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al