Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  18-02-2022 (God’s creation’s special)
Share:

By Village Missionary Movement

Friday, 18-Feb-2022

இன்றைய தியானம்(Tamil)  18-02-2022 (God’s creation’s special)

பேதுருவின் வலை 

“...பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.” – மத்தேயு 13: 47 

சாதாரணமாக நாங்கள் கடலில் மீன்பிடிக்க பயன்படுகிறோம். நான் இல்லை என்றால், மீன் பிடிப்பவர்கள் திரளான மீன்களை பிடிக்க இயலாது. நான் நைலான் கயிறுகளால் செய்யப்பட்டு மிகவும் உறுதியாக இருப்பேன். என்னுடைய உறுதியின் நிமித்தமாக எவ்வளவு எடை கொண்ட மீனையும், எண்ணிக்கைக்கு அதிகமான மீன்களையும் கொண்டுவர முடியும். மீன்களை வெளியே விடாமல் பாதுகாப்பாக கரை சேர்க்க நான் உதவுகிறேன். நாங்கள் ஆழமான இடத்திலும் வீசப்படுவது உண்டு. ஆழம் குறைந்த இடத்திலும் வீசப்படுவதும் உண்டு. எந்த இடத்தில் வீசினாலும் மீன்களை கொண்டுவர எங்களால் முடியும். நாங்கள் அசதியாய் இருப்பதில்லை, எங்களுக்குள் வந்த மீன்களை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு கரையில் சேர்க்கும் வரை நாங்கள் அதை விடுவதில்லை. 

வேதத்தில் இயேசுவின் சீஷர்களில் சிலர் மீன் பிடிக்கிறவர்கள். ஒருநாள் அவர்கள் வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள். அதாவது பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு பேதுரு என்ற சீஷனிடம் ஆழத்திற்கு சென்று வலையைப் போடுங்கள் என்று கட்டளையிட்டார். பேதுரு வலையைப் போட்டவுடன் படகு நிரம்பத்தக்கதாக ஏராளமான மீன்களை சொந்தமாக்கிக் கொண்டார்கள். 

தேவ பிள்ளைகளே! நீங்கள் உங்கள் சபையோடு இணைந்து ஆத்தும ஆதாயம் செய்கிறீர்களா? உங்கள் கைகளில் கிடைத்த ஆத்துமாக்கள் வெளியே சென்றுவிடாமல் பாதுகாத்துக் கொள்கிறீர்களா? நாம் ஊழியத்திற்காக செல்லுகிற பகுதி கடினமானதோ அல்லது இலகுவானதோ ஆத்தும ஆதாயம் செய்ய ஆவலோடு இருக்கிறீர்களா? ஆத்தும ஆதாயம் குறைகிறது என்றாலோ ஆத்துமாக்கள் சபையை விட்டு செல்லுகிறார்களென்றாலோ நீங்கள் ஒரு காரியத்தை செய்ய வேண்டும். நாங்கள் வலையை சரி செய்ய, எங்கள் எஜமானின் கையில் எங்களை ஒப்புக்கொடுப்பதுபோல, நீங்கள் உங்கள் இயலாமையை சரி செய்ய கர்த்தரின் கையில் உங்களை ஒப்புக் கொடுக்க வேண்டும். நாங்கள் எங்கள் வலையில் பல தரப்பட்ட மீன்களை பாதுகாத்து சேகரிப்பது போல, நீங்கள் உங்களிடம் போராட்டத்தோடு, வியாதியோடு, வறுமையோடு, கடனோடு வருகிறவர்களை அரவணைத்து அவர்களுக்காக ஜெபிக்கிறீர்களா? 

தேவபிள்ளைகளே! நீங்கள் செய்கிற பணி மிகவும் உயர்ந்தது. அது என்னவென்றால், நரகத்திற்கும், பாதாளத்திற்கும் செல்லுகின்ற மானிடர்களை காப்பாற்றி, பரலோகத்திற்கு கொண்டு சேர்க்கக்கூடிய உன்னத பணி. ஆகவே தயவுசெய்து அசதியாய் இராமல் துரிதமாய் செயல்படுங்கள். நாங்கள் பிடித்த மீன்கள் மிகவும் ருசியுள்ளது. அதேபோல ஆத்தும ஆதாயமும் மிகவும் ருசியுள்ளதுதாங்க, அதை ஊழியர்கள் மட்டும்தான் செய்யணும் என்பதல்ல. கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டிய பணி. சரிதானே!
-    Mrs. சக்தி சங்கர்ராஜ் 

ஜெபக்குறிப்பு:
நம் ஊழியத்தில் உள்ள 790 ஊழியர்களின் சுகம் மற்றும் ஆரோக்கியத்திற்காக ஜெபியுங்கள்.  

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet