Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  17-02-2022 (God’s creation’s special)
Share:

By Village Missionary Movement

Thursday, 17-Feb-2022

இன்றைய தியானம்(Tamil)  17-02-2022 (God’s creation’s special)

அக்கினியின் ஆதங்கம் 

“...சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.” – மத்தேயு 10:28

“ஐயோ எங்களை விடுதலையாக்க யாருமே இல்லையா” என்ற சத்தமும் அழுகையும் பற்கடிப்பும் நிறைந்த ஒரு இடம் அது. அங்கு சென்ற யாராலும் திரும்பி வரமுடியாது. இந்த இடத்தில் என்னுடைய பங்கே அதிகம். நான் யார் என்று பார்க்கிறீர்களா? நான்தான் பாரபட்சம் பார்க்காமல் செயல்படுகிற அக்கினி பேசுகிறேன். பூமியிலே அதிக விலைமதிப்புள்ளதாய் காணப்படும் தங்கம் என்னால் சோதிக்கப்படும். என்னால் அவைகளின் உருவத்தை மாற்றவும், பின்பு அதை ஜொலிக்க வைக்கவும் முடியும்.  இப்படி நான் சில நல்ல காரியத்திற்குப் பயன்படுகிறேன். நான் யாரையும் தொடுவேன். ஆனால் என்னைத் தொட ஒருவராலும் கூடாது. இப்படி நான் நினைத்ததை செய்து முடிப்பேன் என்ற கர்வம் எனக்குள் இருந்தது. ஆனால் நான் தோற்றுப்போகும் நாள் ஒன்று வந்தது. 

606 ஆம் ஆண்டு பாபிலோன் நாட்டில் நேபுகாத்நேச்சார் என்னும் அரசனால் தண்டனை வழங்கப்பட கடவுளின் பிள்ளைகளான 3 பேரை என்னிடம் தந்து, கொன்றுவிட கட்டளை கொடுத்தார்கள். ஆனால் என்னால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏன், அவர்கள் முடியைக்கூடத் தொட முடியவில்லை. திடீரென்று பார்த்தால் மூவரோடு கூட சேர்ந்து ஒருவர் உலாவுவதைக் கண்டேன். உற்று நோக்கிப் பார்த்த போது அது தேவபுத்திரராகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து! அவர் மீது அதிகாரம் செலுத்த எங்களால் முடியாதே! அவர் இருக்கும்பொழுது எந்த இயற்கையும் அவருக்கு விரோதமாக எழும்ப முடியாது. அவர் பட்சிக்கிற அக்கினியாக இருக்கிறார். ஆனால் அப்போதுதான் தெரிந்தது அவரை மட்டுமல்ல, அவரை சார்ந்து அவருக்காக வாழ்பவர்களையும், அவருடைய சித்தமில்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று! 

தேவ பிள்ளைகளே! நான் அக்கினிதான். என்னால் மற்றவர்களின் சரீரத்தை அழிக்க முடியுமே தவிர, அவர்கள் ஆத்துமாவை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நீங்கள் மனிதர்களை தேவனுக்கென்று ஆதாயப்படுத்த முடியும். நீங்கள் உங்கள் ஆவியிலே அக்கினியாய், வைராக்கியமாய் இருக்கும்பொழுது நிச்சயமாய் உங்களால் அநேகரை தேவனுக்கென்று பற்றி எரிய செய்கிறவர்களாய் மாற்ற முடியும். செய்வீர்களா? 

இப்பொழுது காண்கிற உலகில் எனக்கு ஒரு கடைசி வேலை இருக்கிறது. 2பேதுரு 3:7ல் சொல்லப்பட்டுள்ளது போல, இந்த அநியாயம் அக்கிரமம் நிறைந்த உலகம் எனக்கு இரையாக வைக்கப்பட்டுள்ளது. அதை அழித்து, நீதி வாசம் பண்ணும் புதிய வானம், புதிய பூமி வர நான் வழிவகுப்பேன். ஆனால் பூமியை அழிப்பதோடு என் வேலை முடிந்துவிடவில்லை. மனந்திரும்பாத பாவிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள எரிநரகத்தில் நான் நித்திய நித்தியமாய் எரிந்து கொண்டே இருப்பேன். பற்கடிப்பு நிறைந்த அந்த இடத்திற்கு உங்களுக்கு தெரிந்தவர்கள் வந்துவிடாதபடி அவர்கள் இயேசுவை அறிய உதவிடமாட்டீர்களா? என் ஆதங்கத்தை புரிந்துகொள்வீர்களா? 
-    Mrs. உமா வில்லியம்ஸ் 

ஜெபக்குறிப்பு:
தோழமை ஊழியர்கள் பணிசெய்யும் ஆலயம் இல்லா கிராமங்களில் ஆலயம் கட்டப்பட ஜெபியுங்கள்.

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet