Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  14-02-2022 (God’s creation’s special)
Share:

By Village Missionary Movement

Monday, 14-Feb-2022

இன்றைய தியானம்(Tamil)  14-02-2022 (God’s creation’s special)

காதலின் மறுபக்கம் 

“கர்த்தருக்குக் காத்திரு;… கர்த்தருக்கே காத்திரு.” – சங்கீதம் 27:14

ரோஜாக்கள் அதிகம் விற்பனையாகும் நாள் இன்று. பதின்பருவத்தினர் துள்ளல் மிகு இளமையோடு சந்திக்கும் தினம்தான் இன்று. 

அலைபாயும் நெஞ்சம், எதிர்பாலரைக் கண்டால் உற்சாகம், அவர்களின் பேசும் கண்கள், உருகும் இனிய முகம், இதமாக பேசும் வார்த்தைகள் இவற்றைக் கண்டவுடன் இவன்(ள்)தான் என் வாழ்க்கைத்துணை என்று முடிவுகட்டி விடுகின்றனர்  உலகம் தெரியாத இளசுகள். என்னது கண்டவுடன் காதலா? இது எப்படி வாழ்க்கைக்குச் சரிப்படும்? 

ஒரு புதிய ஆடை வாங்க ஒரு நல்ல ஷோரூமுக்குள் செல்லுகிறீர்கள். தயார் நிலையில் அழகான ஆடை தொங்கவிடப்பட்டுள்ளது. உடனே அதற்குரிய விலை கொடுத்து வாங்கி விடுவீர்களா என்ன? அளவு, தரம், விலை, கம்பெனியின் பெயர் இவையெல்லாம் மனதில் வந்துபோகுமல்லவா? அணிந்து கழற்றிப் போடக்கூடிய துணிமணியையே இப்படி செலக்ட் பண்ணும்போது, வாழ்நாள் முழுவதும் நம்முடன் வரும் உறவினை, கண்டவுடன் தெரிந்தெடுப்பது அறிவுடைய செயலாகத் தெரியவில்லையே! சினிமாவுக்கும் சீரியலுக்கும் வேண்டுமானால் இது கதையாகலாம். ஆனால் நம் வாழ்வு நடிப்புமல்ல, கனவுமல்லவே! கிறிஸ்தவ திருமணம் என்பது சட்டியோ, பானையோ அல்ல. தவறாய் தெரிந்தெடுத்து விட்டேன், இது வேண்டாம், வேறொன்றை வாங்கப் போகிறேன் என்பதற்கு! தவறான தெரிந்தெடுப்பு என்பது வேரை அரித்துப்போடும் கரையான். பெற்றோர் அல்லது பக்தியுள்ள நண்பர் துணையோடு சரியான நபரை ஆண்டவர் உங்கள் வாழ்வில் நுழையச் செய்யும்வரை ஆண்டவரின் திருவடியில் காத்திருங்கள். பதின்ம வயதில் தோன்றும் இளமை உணர்வுகளுக்கு உரமிட்டு உங்கள் எதிர்காலத்தை தொலைத்து விடாதீர்கள். 

இன்று காதலின் மறுபக்கத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். விபச்சார விடுதிகளில் விற்கப்படும் பல இளம்பெண்கள் தங்கள் இளம் காதலர்களால் விற்கப்பட்டவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்குமோ? காலம் கடந்தபின் யோசிக்கும்முன் இன்றே சிந்தியுங்கள். வாலிபத்தில் சுய கட்டுப்பாடு அவசியம். உயிரற்ற பட்டம் கூட கட்டுப்பாடு இல்லாவிட்டால் உயரங்களை தழுவாமல் மண்ணில் விழுந்துவிடும். சுயகட்டுப்பாடின்றி ஆண்டவரின் கட்டளைகளை மீறி, திருமண வரைமுறைகளைப் பின்னுக்குத் தள்ளி வாழ்வது அழிவுக்கு நேராய் கொண்டு போய் விடும். தொட்டுப் பழகுவது பஞ்சின் அருகே நெருப்பை வைப்பதற்கு சமம். தேவபயத்தோடு உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். 

வாலிபனே! “இளமையில் கல்” என்ற முதுமொழிக்கேற்ப இலட்சியத்தோடு படி, காதலிக்க நேரமில்லை என்ற board ஐ இருதயத்தில் மாட்டிவிடு. கொஞ்சம் பொறுத்திரு. ஆதாமுக்கு ஏற்ற துணையை கொடுத்த ஆண்டவர், எற்ற காலத்தில் ஏற்ற துணையை உனக்குத் தருவார். அவளோ(னோ)டு வாழ்க்கை முழுவதும் காதலர் தினத்தை கொண்டாடலாமே! 
-    Bro. சாமுவேல் ரத்தினசாமி 

ஜெபக்குறிப்பு:
பணித்தள ஊழியங்களில் பயன்படுத்தப்படும் நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்கள் பழுதின்றி பயன்பட ஜெபியுங்கள்.

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al