Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  12-02-2022 (God’s creation’s special)
Share:

By Village Missionary Movement

Saturday, 12-Feb-2022

இன்றைய தியானம்(Tamil)  12-02-2022 (God’s creation’s special)

மேகங்களின் அனுபவம் 

“மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள் வரைக்கும் பிரயாணம் பண்ணாதிருப்பார்கள்.” – யாத்திராகமம் 40:37 

வனாந்தரத்தில் மேகம்:  மேகமான நான், இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து கானானுக்கு பிரயாணம் பண்ணுகையில் 40 வருஷமாகவும் அவர்களுக்கு பகலில் நிழலாய் இருந்து பாதுகாத்து வந்தேன். அது மாத்திரமல்ல, நான் எந்த இடத்தில் முன் செல்லாமல் நிற்கிறேனோ அங்கே இஸ்ரவேல் புத்திரர் பாளயம் இறங்குவார்கள்; நான் எப்போது புறப்படுகிறேனோ அப்போது மட்டுமே அவர்கள் புறப்படுவார்கள். நான் பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளமாய் இருப்பதால் என்னுடைய வழிநடத்துதலின்படியே இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்பட்டது போல், இந்நாட்களில் நீங்களும் பரிசுத்த ஆவியானவர் நடத்துகிறபடியே உங்கள் வாழ்வில் ஊழியம், திருமணம், படிப்பு, வேலை, வீடு கட்டுதல் உட்பட அனைத்து காரியங்களிலும் செயல்படுவீர்களானால் நீங்கள் பாதுகாப்பாய் சுகமாயிருப்பீர்கள்.   

ஒளியுள்ள மேகம்: மத்தேயு 17ம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து உயர்ந்த மலையில் மறுரூபமானபோது பேதுரு இயேசுவிடம், “உமக்கும், மோசேக்கும் எலியாவுக்கும் என 3 கூடாரங்களைப் போடுவோம்” என்று 3 பேரையும் சமமாக பாவித்து பேசும்போது, ஒளியுள்ள மேகமாகிய என்னிடத்திலிருந்து ஒரு சத்தம் புறப்பட்டு, “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்” என்று பேசி இயேசுவின் தனித்துவத்தை பேதுருவுக்கு விளங்க செய்தது. நீங்களும் இயேசு மாத்திரமே மகிமைக்கும், கனத்திற்கும் பாத்திரர் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 

அப். 1:9ல் ஒரு மேகம் இயேசுவை உயர எடுத்துக் கொண்டது என்று வாசிக்கிறீர்கள். 1 தெச. 4:17ல் “உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம்” என்று எழுதப்பட்டதையும் அறிவீர்கள். இவ்வாறு மேகமாகிய என்மேல் நீங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு என்றென்றும் கர்த்தருடனேகூட இருப்பதற்கு, கர்த்தருக்கு முன்பாக உங்கள் வாழ்க்கையை எப்பொழுதும் கறைதிரை அற்றதாய் காத்துக் கொள்ளுங்கள். அவர் வருகையில் உங்களை முகமுகமாய் சந்திக்கிறேன். அதுவரை தேவபிரசன்னமும் வழிநடத்துதலும் உங்களோடிருப்பதாக! 
-    K. பெஞ்சமின் 

ஜெபக்குறிப்பு:
அலுவலகப் பணியாளர்கள் ஒவ்வொருவரையும் தேவன் விசேஷித்த ஆவியினால் நிரப்பி நடத்த ஜெபியுங்கள். 

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al