Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  07-02-2022 (God’s creation’s special)
Share:

By Village Missionary Movement

Monday, 07-Feb-2022

இன்றைய தியானம்(Tamil)  07-02-2022 (God’s creation’s special)

என் முகவரி 

“...அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.” – மத்தேயு 16:24 

இரண்டாயிரத்து இருபது வருடங்களுக்கு முன்பாக நான் ஜனங்களால் வெறுக்கப்பட்டவனாக இருந்தேன். என்னைப் பார்ப்பவர்கள் பயமும் திகிலும் அடைந்தனர். இதுதான் என் முகவரி. நான் யார் என்று யோசிக்கிறீர்களா? ரோமர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கொடுமைப்படுத்தி, அவர்களின் கை கால்களில் ஆணி அடித்து அவர்களின் உடம்பு முழுவதும் உள்ள இரத்தத்தை வெளியே சிந்தவிட்டு மிகவும் கொடூரமான மரண தண்டனை கொடுக்கும் சாபத்தின் சின்னமாக இருந்த சிலுவை பேசுகிறேன். என்னிடத்தில் மரண அலறலும் இரத்தமும் எப்பொழுதும் காணப்படும்.  இப்படி என்னுடைய வாழ்க்கை எனக்கே பிடிக்கவில்லை. என்னை நானே வெறுத்தபோது, இயேசு கிறிஸ்து என்னையும் விரும்பி தூக்கினார். அன்றிலிருந்து சாபத்தின் அடையாளமாக இருந்த நான் மீட்பின் சின்னமாக மாற்றப்பட்டேன். 

அவர் என்னை சுமந்து, சிலுவையில் மரிக்குமளவிற்கு எந்தப் பாவமும் செய்யவில்லை. ஆனால் உலகமக்கள் ஒவ்வொருவருக்காகவும் சிலுவையில் அறையப்பட்ட தன்னை ஒப்புக்கொடுத்தார். அவர் பாவத்தைப் பாராத பரிசுத்தராக இருந்தபோதிலும் அவர் என்மேல் தொங்கி, பாவத்தினால் அடிமைப்பட்டிருந்த தம்முடைய ஜனங்களை விடுதலை செய்யும்படியாகவும் மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனை தன்னுடைய மரணத்தினாலே அழித்தார். மீறுதலினால் தேவனை விட்டுப் பிரிந்த மனிதனோடு அப்பா-மகன் என்ற இரத்த பந்தத்தை மீண்டும் உண்டாக்கும்படியாகவும், அவர் என்னைக் கையிலெடுத்து புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்ல, அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு என் மூலம் அவர்களின் சாபங்களையும் நோய்களையும் நீக்கி விட்டார். அவரைப் பின்பற்றுபவர்களும் என்னைக் கட்டாயமாய் சுமக்க வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார். 

ஆனால் இன்றைய கிறிஸ்தவர்களைப் பார்த்தால் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அனுதினமும் தியானிக்க வேண்டிய என்னை புனித வெள்ளி அன்று மட்டுமே யோசிக்கின்றனர். கோபுரத்தின் உச்சியில் வைத்திருக்கும் என்னை தங்கள் வாழ்க்கையில் மேன்மைப்படுத்த தவறுகிறார்கள். என்னை தங்கள் கழுத்துகளில் டாலராக சுமந்தால் போதும் என நினைக்கின்றனர். ஆனால் எனக்காக தங்கள் கழுத்தையும் கொடுப்பவர்கள்தான் கிறிஸ்தவர்கள் என அவர்கள் அறியவில்லை. 

அன்பானவர்களே! நீங்கள் இயேசுவின் உண்மை சீஷனாய் மாறி, அவரது அடிச்சுவடுகளை பின்பற்ற வேண்டுமானால் என்னை சுமக்க வேண்டியது கட்டாயமே! அனுதினமும் என்னை அவர் பலத்தோடு சுமந்து செல்லுங்கள். உங்கள் வாழ்வை நான் பாரமாக அல்ல, இலகுவாகவே மாற்றுவேன். என் முகவரியை கொடுத்துவிட்டேன். வழிமாறாமல் சிலுவை சுமந்து வந்தீர்களென்றால் நித்திய மகிழ்ச்சியையும், நித்திய ஜீவனையும் கண்டடையலாம். 
-    S. மனோஜ்குமார் 

ஜெபக்குறிப்பு:
YouTube-ல் ஒளிபரப்பப்படும் கிராமிய நேரம் நிகழ்ச்சியை இன்னும் அநேகர் பார்க்க, ஆசீர்வாதம் பெற ஜெபியுங்கள்.

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al