By Village Missionary Movement
Monday, 18-Jan-2021இன்றைய தியானம்(Tamil) 18-01-2021
தனிமையில் இனிமை
“...அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.” - மத்தேயு 6:6
அசோக்கின் வீட்டிலே எல்லோரும் பரபரப்பாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் இவனோ தன் மொபைல் போனில் சார்ஜ் குறையாமல் பார்த்துக்கொண்டான். அப்பா அவனிடம், “டேய் அசோக் பொறுப்பா இரு, நேரத்தை வீணா செலவழிக்காதே, இந்த முறையாவது IAS தேர்விலே பாஸ் பண்ணு, உன்னை நம்பித்தான் நாங்க எல்லோருமே இருக்கோம்டா” எனக் கூறிவிட்டு தன் வேலைக்குக் கிளம்பி விட்டார். அசோக்கோ வழக்கம்போல் தனிமையில் மொபைல் போனில் மற்றவர்களின் statusயும், WhatsApp, Facebook ல் updatesயும் பார்த்து நேரத்தை செலவழித்தான். நேரம் போவதே தெரியாதபடி வீண்காரியங்கள் அவன் நேரத்தையும், சிந்திக்கும் திறனையும் விழுங்கிவிட்டன. பள்ளி நாட்களில் திறமையாகப் படித்தாலும், இந்த முறையும் IAS தேர்வில் தோல்வியுற்றான். வீட்டின் பொறுப்பு, நாட்டின் பொறுப்பு என எல்லாவற்றையும் மறந்துவிட்டான். அவனுக்கு கிடைத்த தனிமையான நேரத்தை கவனம் செலுத்த வேண்டிய காரியத்தில் செலவளிக்காததால், தீமைக்கு நேராய் அவனை தனிமை வழிநடத்தியது.
இராஜாவாக இருந்த தாவீதோ ஒரு நாள் தனிமையில் உப்பரிகையின்மேல் உலாவிக் கொண்டிருக்கையில், பாவத்தில் விழுந்துவிட்டான். வெளியரங்கமாய் தாவீது தேவனைத் துதித்தபோது ராஜாவாக உயர்ந்தான். அதே தனிமையில் தேவனை பாராமல் சுற்றிப் பார்த்தபோது, பாவத்திலே விழுந்தான். சிம்சோன் தனியாக ஒரு பெண்ணிடம் மாட்டிக் கொண்டான். இன்றைக்கு நாம் நேரடியாக இப்படிப்பட்ட பாவங்களில் அகப்படவில்லையென்றாலும், மொபைல்போனில் காணப்படும் ஒரு மாய உலகத்துக்கு அடிமையாகி விடுகிறோம். எங்கேயோ கண்காணாத இடத்தில் உருவாக்கி காட்டப்படும் மாய காட்சிகளுக்கு அடிமையாகிவிடுகின்றோம். ஆனால் யோசேப்பு தனிமையில் காட்டிய வைராக்கியம் அவனை மிகப்பெரிய வெற்றிக்கு நேராய் வழி நடத்தியது.
நண்பர்களே! தனிமையில் உங்களது அடையாளம் 10 இலக்கம் கொண்ட ஒரு மொபைல் போனாக ஆகி விடக்கூடாது. தனிமையில் நாம் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுவதை வழக்கமாக்கி கொள்ளவேண்டும். அந்தரங்கத்தில் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணுங்கள் என்று இயேசு கூறியது போல தனிமையில் மொபைல்போனை ஒதுக்கி வைத்து விட்டு, பிதாவை நோக்கி ஜெபம்பண்ணிப் பாருங்கள். உங்கள் பொறுப்புகளை உணர்வீர்கள். உங்கள் தனிமையை தேவனே நிரப்பட்டும். தேவனில்லாத தனிமை பாவத்திற்கே உங்கள் இருதயத்தை சாயச் செய்யும். நாமும் தனிமையான நேரங்களை எல்லாம் தேவனிடத்தில் செலவிடுவோம். அப்போதுதான் தனிமை இனிமையாக மாறும். ஆகவே இன்றே முடிவெடுப்போம். தனிமையில் தேவனோடு இருக்க எப்போதும் நாடுவோம்.
- T. சங்கர்ராஜன்
ஜெபக்குறிப்பு:
நம்முடைய ஊழியத்தில் புதிதாக இணைந்துள்ள ஊழியர்கள் ஒத்த தரிசனத்தோடு செயல்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250