By Village Missionary Movement
Sunday, 06-Feb-2022இன்றைய தியானம்(Tamil) 06-02-2022 (Kid’s special)
நன்றி சொல்ல மறவாதே
“என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.” – சங்கீதம் 103:2
Hello குட்டீஸ்! எப்படியிருக்கீங்க. கடைசி நாட்களில் கொள்ளை நோய் உண்டாகும் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது இல்லையா? ஆனாலும் நாம் ஜெபிக்கும்போது, நம்மைப் பாதுகாத்து, அற்புதமாய் நடத்த இயேசப்பா நம் கூடவே இருக்கிறாங்க. நாம் பயப்படத் தேவையில்லை. Ok வா, சரி கதை கேட்போமா?
அழகான மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் புறாவும், எறும்பும் நண்பர்களாய் இருந்தாங்க. சல சலவென தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைக்குத் தண்ணீர் குடிப்பதற்காக புறா வரும். அது வரும்போதெல்லாம் தன் எறும்பு நண்பனைப் பார்த்து பேசி விட்டுத்தான் செல்லும். எறும்பு சுறுசுறுப்பாகவும், ஒற்றுமையாகவும் இருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டு போகும் இந்த புறா, ஒரு நாள் உணவு சேமிப்பதற்காக போய்க் கொண்டிருந்த எறும்பு தவறி நீரோடையில் விழுந்துவிட்டது. தற்செயலாய் அங்கு வந்த புறா ஒரு இலையைக் கொய்து எறும்பின் பக்கமாய் போட்டது. எறும்பு புறாவுக்கு நன்றி சொல்லி விட்டு, “சரியான நேரத்தில் வந்து என்னைக் காப்பாற்றினாயே நண்பா! என் வாழ்நாளில் இந்த உதவியை மறக்கவே மாட்டேன்” என்றது. என்ன குட்டீஸ்! நீங்களும் உங்களுக்கு உதவி செய்கிறவர்களுக்கு நன்றி சொல்வீங்களா? Very good.
இன்னொரு நாள் புறா மரக்கிளையில் உட்கார்ந்திருந்தபோது, வேடன் ஒருவன் தன் அம்பை எடுத்து புறாவை அடிக்க தயாராயிருந்தான். திடீரென்று, அந்த பக்கமாய் வந்த எறும்பு வேடனை கண்டவுடன் தன் நண்பர்களோடு சேர்ந்து அவன் காலில் கடித்துவிட்டது. “ஐயோ! அம்மா எறும்பு கடிக்குதே” என்று குதித்ததும் புறா பறந்துபோயிற்று. தன்னைக் காப்பாற்றியது எறும்புதான் என நினைத்து நன்றி சொல்லியது.
என்ன குட்டி பிள்ளைகளே! எறும்பும், புறாவும் தனக்குக் கிடைத்த நன்மைக்கு நன்றி சொல்ல மறக்கவே இல்லை பார்த்தீங்களா? உங்க வாழ்க்கையில் Jesus எவ்வளவு நன்மை செய்திருக்காங்க, நினைத்து பார்த்திருக்கிறாயா? இரவும்-பகலும் நம்மை பாதுகாத்து சுகம் தந்து தேவைகளை சந்தித்து....இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... இல்லையா? நீங்க daily Jesus –க்கு நன்றி சொல்ல மறக்கவே கூடாது செல்லங்களே? Ok தானே!
- Mrs. ஜீவா விஜய்
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250