Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05-02-2022 (God’s creation’s special)
Share:

By Village Missionary Movement

Saturday, 05-Feb-2022

இன்றைய தியானம்(Tamil) 05-02-2022 (God’s creation’s special)

 

அரியவை 

 

“செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.” – நீதிமொழிகள் 31:30 

 

கடலில் சற்று வெப்பம் நிறைந்த பகுதியில் நான் பிறந்து வளர்ந்தேன். நான் உருவாகும் விதம் சற்று கடினம்தான். என்னை கண்டெடுப்பதும் அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஏனென்றால், எடுக்கப்படும் எல்லா சிப்பிகளுக்குள்ளும் நான் இருப்பதில்லை. ஒரு சிலவற்றில்தான் இருக்கிறேன். இப்படி நான் உருவாவதும் உருவாக்கப்படுவதும் ஒரு கடினமான செயல்முறை. நான் ஒரு விலையுயர்ந்த பொருளாக விற்கப்படுவதற்கு காரணமென்னவென்றால், என்னை உருவாக்கியவர் என்னை உருவாக்கிய விதம் அபூர்வமானதாகும். 

 

முத்தான நான் உருவாகும் விதத்தை கொஞ்சம் கேளுங்களேன். சிப்பிக்குள் சில தின்மங்கள் காணப்பட்டு பின்பு எப்பித்தீலியம் திசுக்களால் உருவைப் பெற்று, அதில் திரவம் சூழ்ந்து நாங்கள் உருவாக்கப்படுகிறோம். இது ஒரு நெடுநாள் பயணம். ஆனால் வேதத்திலே பெண்ணின் குணம் என்னைப் பார்க்கிலும் உயர்ந்தது என்றால் அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கர்த்தர் கொடுத்திருக்கிறார். ஆம், குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது. ஓ! என்னைப் பார்க்கிலும் பெண்ணின் குணம் உசத்தியா! இது என்ன மாயம் என்று நான் நினைப்பதுண்டு. எங்களில் பலவகை, பல வர்ணங்கள் இருப்பது போல பெண்களும் பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் பாருங்களேன் (நீதி.31:10-29). 

 

முத்துக்களாகிய எங்களை விட, உயர்வான பெண்களே, நீங்கள் யார் என்று உங்களுக்கு சொல்லட்டுமா? நீங்கள் உங்கள் புருஷனுடைய சம்பத்தை குறையவிடாதிருக்கிறவர்கள் (31:11) நீங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உங்கள் புருஷனுக்கு தீமையை அல்ல நன்மையையே செய்கிறவர்கள் (31:12). நீங்கள் சிறுமைப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் உங்கள் கரங்களை நீட்டுபவர்கள் (31:20) நீங்கள் உங்கள் வீட்டார்மீது அக்கறையுள்ளவர்கள் (31:21). நீங்கள் கண்ணியமும் வருங்காலத்தை குறித்த சந்தோஷம் உடையவர்கள் (31:25). நீங்கள் உங்கள் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறவர்கள் (31:26). நீங்கள் சோம்பலாய் இராமல் தன் வீட்டுக் காரியங்களைக் குறித்ததான அக்கறை உள்ளவர்கள் (31:27). உங்கள் பிள்ளைகள் உங்களைப் பாக்கியவதி என்று சொல்லும் போற்றுதலுக்கு உரியவர்கள் (31:28). 

 

நாங்கள் அழகுள்ளவர்கள்தான், பலவர்ண நிற அழகு உள்ளவர்கள்தான், ஆனாலும் எங்கள் அழகு முற்றிலும் வெளித்தோற்றத்தில் மட்டுமே! நீங்கள் அப்படியல்ல, உட்புறத்தில் அழகுள்ளவர்கள். அதாவது தேவனுக்குப் பயந்து, உங்கள் உள்ளத்தில் மறைந்திருக்கிற குணத்தாலும், செயலினாலும் அழகுள்ளவர்கள் (31:30). முத்தான பெண்களே! உங்கள் குணமே விலையேறப்பெற்ற முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது. அல்லேலூயா. 

- Bro. பொன்மணி பால் 

 

ஜெபக்குறிப்பு:

தினந்தோறும் அதிகாலை 5 மணிக்கு You tube ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் “Healing Service” ல் பங்குபெறும் நபர்கள் சுகமடைய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al