Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 31-01-2022
Share:

By Village Missionary Movement

Sunday, 30-Jan-2022

இன்றைய தியானம்(Tamil) 31-01-2022

 

நினைத்துக் கொள்ளுங்கள் 

 

“லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.” – லூக்கா 17:32 

 

“ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே” என்கிறது தமிழ் பழமொழி. ஒரு குடும்பத்தின் ஆசீர்வாதத்திற்கும் சாபத்திற்கும் பெண்களே காரணமாகின்றனர். எனவே வேதம் இரண்டு பெண்களை எச்சரிக்கைப் பலகைகளாக நமக்கு முன்பாக நிறுத்தி, அவர்களை நினைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுகிறது. அவர்கள் தான் கீழ்க்கண்ட பெண்கள். 

 

லோத்துவின் மனைவி: இவள் நீதிமானின் மனைவி. தேவ இரக்கத்தினால் சோதோமின் அழிவினின்று தப்ப இரக்கம் பெற்றவள். விட்டுவிட்டு வந்த சோதோமின் மேல் ஆசை, இச்சை இருந்தபடியால், பின்னிட்டுப் பாராதே என்ற தேவ கட்டளையை மீறி உப்புத்தூண் ஆனாள். ஒருவேளை அவள் நீதிமானாகிய கணவனைப் பின்பற்றி அவனுடன் சென்றிருந்தால் அவளது மகள்கள் மூலமாக மோவாபியர், அம்மோனியர் என்ற சாப சந்ததிகள் உருவாகியிருக்காது. ஒரு குடும்பத் தலைவி நல்ல முன்மாதிரியாக விளங்கவும், அவள் குடும்பம் ஆசீர்வதிக்கப்படவும் வேண்டுமாயின் அவள் தேவ கட்டளையை மீறக்கூடாது. இரட்சிக்கப்படுவதற்கு முன் காணப்பட்ட மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகும் பழைய மனுஷனைக் களைந்து போட்டு, தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ள வேண்டும்.

 

மிரியாம்: தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவள். ஒரு தீர்க்கதரிசியும் கூட! இப்படியான விசேஷித்த அழைப்பைப் பெற்ற அவளுக்குள் முறுமுறுப்பின் ஆவி இருந்தது. 6 வயதிற்கு இளைய தன் சகோதரனும், ஊழியக்காரனுமாயிருந்த மோசேக்கு விரோதமாகப் பேசியதால் குஷ்டரோகியானாள். கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக் கொள்ளுங்கள் (உபா.24:9) என்று வேதம் கூறுகிறது. முறுமுறுத்த இஸ்ரவேலர் சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள். எனவே நீங்களும் முறுமுறுக்காதிருங்கள் என்று வேதம் கூறுகிறது. எனவே எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செலுத்தும் மனப்பாங்கோடு, முறுமுறுப்புக்கு இடம் கொடாதிருக்க வேண்டும். ஊழியக்காரரைப் பற்றி குறைகூறுவதை நிறுத்தி விடுவோம். முறுமுறுத்த மிரியாமை, ஊழியக்காரனைக் குறை கூறிய மிரியாமை பயத்தோடும், எச்சரிக்கையோடும் நினைத்துக் கொள்வோமாக! உலகத்தை பின்னிட்டுப் பார்த்து உப்புத்தூணான லோத்தின் மனைவியையும் நினைத்துக் கொண்டு எச்சரிப்போடு வாழ்வோம். 

- Mrs. கீதா ரிச்சர்ட் 

 

ஜெபக்குறிப்பு:

ஒவ்வொரு நாளும் அதிகாலை வேளையில் நடைபெறுகின்ற சுகமளிக்கும் ஆராதனையில் கலந்து கொள்ளும் நபர்களை தேவன் தம் பெலத்தால் நிரப்பி அபிஷேகிக்க, சுகத்தை பெற்றுக் கொள்ள ஜெபியுங்கள்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet