Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 27-01-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 27-Jan-2022

இன்றைய தியானம்(Tamil) 27-01-2022

 

நம்பிக்கையோடிருங்கள் 

 

“ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.” – எபிரெயர் 10:35 

 

“உங்கள் பணி இந்த திருச்சபைக்கு போதுமானதாக இருக்கவில்லை. இவ்வருடம் முழுவதும் இந்த திருச்சபைக்கு கிடைத்த பலன் ஒரே ஒரு சிறுவன் மட்டுமே. ஆகவே தயவுசெய்து இங்கிருந்து மாறுதலாகி வேறு எங்கேயாவது சென்று விடுங்கள்.” என்றனர் திருச்சபையின் மூப்பர்கள். இந்த வார்த்தைகள் வயதான அந்தப் போதகருக்கு மிகவும் வேதனையாக இருந்தது. திருச்சபையிலிருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக் கொள்ளும்படியான தீர்மானத்தை போதகர் எடுத்தார். அங்கு தன்னுடைய கடைசி ஞாயிறு ஆராதனையின் முடிவில், குறிப்பிட்ட அச்சிறுவன் போதகரிடம் வந்து, “ஐயா, நானும் பெரியவனாகி உங்களைப் போன்று ஒரு போதகராக வர முடியுமா?” என்று கேட்டான். கண்களில் கண்ணீரோடு அவன் தலையில் கையை வைத்து, “ஆம், தம்பி நீயும் ஒரு பெரிய ஊழியனாக வருவாய்” என்றார். 

 

வருடங்கள் பல உருண்டோடின. ஆப்பிரிக்காவில் உள்ள கடினமான மக்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மிஷனெரி லண்டன் திரும்புகிறார் என கேள்விப்பட்டு திரளான ஜனங்கள் மிகுந்த ஆரவாரத்தோடு அம்மிஷனெரியை வரவேற்க கூடியிருந்தனர். அது யாரென்றால், “நான் ஒரு போதகராக உங்களைப் போல் மாறமுடியுமா?” என கேள்வி கேட்ட அதே சிறுவன்தான். அந்த ராபர்ட் மொஃபட் என்ற தலை சிறந்த ஊழியனைத்தான் லண்டன் மாநகரம் வரவேற்க காத்திருந்தது. 

 

என்னுடைய ஊழியத்திலோ, கிறிஸ்தவ வாழ்விலோ பெருந்திரள் எண்ணிக்கையளவில் மாற்றம் உண்டாகவில்லை என எண்ணி, சோர்ந்து விட வேண்டாம். கர்த்தருக்குள் நாம் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்பதை அறிந்தவர்களாய் கர்த்தருடைய கிரியைகளிலே அசையாதவர்களாய், உறுதிப்பட்டவர்களாய் இருங்கள் என பரி. வேதாகமம் கூறுகிறது. (1கொரி. 15:58) 

 

மேலே நாம் வாசித்த வேத வசனத்தில் மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டு விடாதிருங்கள் என வாசிக்கின்றோம். வருஷத்தின் துவக்கத்தில் காணப்படுகின்ற ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்குள் நாம் நம்முடைய நம்பிக்கையை இழந்து விடாமல், விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் பின்வாங்கிப்போவானேயானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். நாமோ கெட்டுப் போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருப்போம். ஆண்டவர் நம்மை வழிநடத்துவாராக! ஆமென். 

- P. ஜேக்கப் சங்கர் 

 

ஜெபக்குறிப்பு:

12 மிஷனெரிகள் மூலமாக அந்தந்த மாநிலங்களில் அர்ப்பணிக்கப்பட்ட 500 மிஷனெரிகளை இப்புதிய ஆண்டில் தேவன் எழுப்பித் தர ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet