By Village Missionary Movement
Monday, 24-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 25-01-2022
நாம் செய்கிறது நியாயமல்ல
“....கச்சையை ஒளித்து வைத்த இடத்திலே தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக் கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமற்போயிற்று” – எரேமியா 13:7
இந்த நாளிலும் ஆண்டவர் தனக்குக் கொடுத்த திறமைகள் மற்றும் கிருபைகளை ஒளித்து வைத்த சில நபர்களை குறித்து நாம் பார்க்கலாம். எரேமியா 13ம் அதிகாரத்தில் அநேக நாளாய் ஐப்பிராத்து நதி ஓரத்தில் ஒளித்து வைக்கப்பட்ட கச்சை கெட்டுப்போய் ஒன்றுக்கும் உதவாமற்போயிற்று என்று நாம் வாசிக்கிறோம். நம்முடைய வாழ்க்கையிலும் ஆண்டவர் நமக்குக் கொடுத்த தாலந்துகளை, வரங்களை ஒருவேளை நாம் புதைத்து ஒளித்து வைத்திருப்போமென்றால் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நாம் அதை எடுத்து ஆண்டவருக்காக பயன்படுத்த தீர்மானிப்போம்.
நியாயாதிபதிகள் புத்தகத்தில் சிம்சோன் காசாவில் ஒரு வேசியின் வீட்டிலும், சோரேக் ஆற்றங்கரையில் தெலீலாளின் வீட்டிலும் தேவன் தனக்குத் தந்த உன்னத பெலத்தை கர்த்தரோடு உள்ள உறவை ஒளித்து வைத்து அநேக நாளாய் உணர்வில்லாமல் இருந்ததினால் முடிவில் பரிதாபமாய் கெட்டுப்போனான். நாமும் இப்படிப்பட்ட தவறான இடங்களில், தேவன் நமக்குக் கொடுத்த கிருபைகளை ஒளித்து வைத்திருப்போமென்றால் இன்றைக்கே உணர்வடைவோமா?
மத்தேயு 25ம் அதிகாரத்தில் ஒரு தாலந்தை வாங்கினவன் நிலத்தை தோண்டி தன் எஜமானுடைய பணத்தை புதைத்து வைத்தான். முடிவு பிரயோஜனமற்ற அந்த ஊழியக்காரன் அழுகையும் பற்கடிப்பும் நிறைந்த புறம்பான இருளுக்கு உரியவனாய் மாறிப் போனான். நாமும் இப்படி இருப்போமானால் புறம்பான இருளில் ஆண்டவர் நம்மை தள்ளுமுன் விழித்து செயல்பட்டு எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்க ஆயத்தமாவோமா!
பிரியமானவர்களே! எலிசா தீர்க்கதரிசியின் நாட்களில் வாழ்ந்த குஷ்டரோகிகளான நாலுபேர் செய்த நற்செயல்களிலிருந்து நாம் ஒரு பாடத்தை கற்றுக் கொள்வோம். பஞ்சம் தலைவிரித்தாடிய அந்நாட்களிலே அவர்கள் சீரியருடைய பாளையத்துக்குள் புகுந்து அங்கிருந்த பொக்கிஷங்களை தங்களுக்கென்று ஒளித்து வைத்த ஆரம்ப நேரத்திலேயே “நாம் செய்கிறது நியாயமல்ல” என்று உணர்வடைந்து தாங்கள் அறிந்த நற்செய்தியை இராஜாவின் அரமணையாருக்கு அறிவித்தார்கள். அதன் மூலம் இஸ்ரவேலின் ஜனங்கள் மகிழ்ந்தார்கள். “நாம் செய்கிறது நியாயமல்ல” என்று நாம் எப்போது உணர்வடையப் போகிறோம்? Bro. பெஞ்சமின்
ஜெபக்குறிப்பு:
“கழுதைகள் கையேடு” அனுப்ப Postal Permit கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250