By Village Missionary Movement
Saturday, 22-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 23-01-2022 (Kids Special)
ஞானமே முக்கியம்
“ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.” – நீதி. 3:13
Hai குட்டீஸ், How are you? நீங்க ஒவ்வொரு வாரமும் கதைதானே கேட்கிறீங்க. இன்றைக்கு Bible-ல இருக்குற உண்மை சம்பவம் ஒன்றைத்தான் சொல்லப்போறேன். நீங்க கேட்க ரெடிதானே? Are you ready? O…O…yes, சொல்லுங்க பார்க்கலாம். Super சொல்லிட்டீங்களே! சாலொமோன் என்ற ராஜா இருந்தார். அவருடைய அப்பா தாவீது ராஜா ஆண்டவருக்கு பிரியமாய் வாழ்ந்து ஜனங்களுக்கு நன்மை செய்து நல்லா ஆட்சி செய்தாங்க. இவரைப் போலவே சாலொமோன் ராஜாவும் ஆண்டவரை நேசிக்கின்ற மனிதராய் இருந்தார். ஒருநாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது கனவில் ஆண்டவர் தோன்றினார். நீங்களும் கனவு கண்டிருக்கீங்கதானே! ஆமா, இவர் கனவில் வந்த ஆண்டவர் உனக்கு என்ன வேண்டும் கேள்...நான் தருகிறேன் என்று கேட்டார். நீங்களா இருந்தா என்ன கேட்டிருப்பீங்க...யோசித்துப் பாருங்க.
சாலொமோன் ராஜாவும் யோசித்தார். பணம், புகழ், செல்வம்-இதெல்லாம் கேட்டிருப்பார் என்று நினைக்கிறீங்களா? அதுதான் இல்லை. வேறென்ன கேட்டிருப்பாரு? கேளுங்க சொல்றேன். நான் ஒரு நல்ல அரசனாய் இருந்து ஜனங்களுக்கு நல்லாட்சி செய்ய ஞானம் வேண்டும் என்று கேட்டார். இது ஆண்டவருடைய பார்வையில் அருமையான பதிலாய் இருந்தது. இதனால் அவர் கேட்ட ஞானத்தையும், கேட்காத ஐசுவரியத்தையும், கனத்தையும் கொடுத்தார். இவரின் ஞானத்தைக் கேள்விப்பட்டு, உலகத்திலுள்ள ராஜாக்களும், ராணிகளும் சாலொமோனைத் தேடி வந்தார்கள். இவர் நியாயமாய் தீர்ப்பு சொல்கிறதை கேட்ட ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். இவர் பேர், பெருமை எல்லா இடங்களிலும் பேசப்பட்டது. சாலொமோன் ஒரு பெரிய ஞானி மட்டுமல்ல, அவர் மிகப் பெரிய பணக்காரராகவும், புகழ்பெற்ற அரசராகவும் இருந்தார்.
அருமையான தங்க குட்டிகளே! சாலொமோன் ராஜாவுக்கு ஞானத்தை கொடுத்த தேவன் உங்களுக்கும் கொடுப்பார். கேட்கிற யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கின்ற இயேசு கிறிஸ்துவிடமிருந்து மட்டும்தான் நீ ஞானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த புதிய ஆண்டிலும் ஞானத்தை பெற்றுக்கொண்டு வெற்றியாய் வாழ வாழ்த்துகிறோம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
- Bro. விஜய்குமார்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250