Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19-01-2022
Share:

By Village Missionary Movement

Wednesday, 19-Jan-2022

இன்றைய தியானம்(Tamil) 19-01-2022

 

உயர்வான பாதுகாப்பு

 

“வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.” – மத்தேயு 15:18 

 

ராஜீ ஒரு கம்ப்யூட்டர் கம்பெனியில் பணிசெய்து வந்தார். ஒரு நாள் அவரது கம்பெனிக்கு கிராமத்திலிருந்து குப்புசாமி என்பவர் கம்ப்யூட்டர் வாங்க வந்தார். வந்தவர், “என் மகன் பட்டணத்தில் பெரிய பலசரக்கு கடை வைத்துள்ளான். அதற்குரிய கம்ப்யூட்டர் நல்ல தரமானதாக வேண்டும்” எனக் கேட்டார். ராஜீ, “இது புதுமாடல் விலை அதிகம். இது விலை குறைவு கொஞ்சம் பிந்தின மாடல்” என்றான். குப்புசாமி பார்த்துவிட்டு, “கோபமாக பேங்க்-ல உபயோகிக்கிறது என் பையனுக்கு பல சரக்கு கடைக்கு தாறீயே. பலசரக்கு கடைக்கு உள்ளது வேண்டும்” என்றார். ராஜீ சிரித்துக் கொண்டே, “ஐயா கம்ப்யூட்டர் எல்லாம் ஒன்றுதான். ஆனால் அதில் எந்த விஷயங்களை ஏற்றி வைக்கிறோமோ அதுதான் வரும். அதற்குத் தகுந்த இடங்களில் பயன்படுத்தலாம். இதில் உங்கள் கடைக்குத் தேவையான விஷயங்களை ஏற்றினால் உங்கள் கடைக்கு அது பயனுள்ளதாக மாறிவிடும்” என்றான். ஆம், நம் வாழ்விலும் அப்படித்தான். நாம் எதை சிந்தனைக்குள் ஏற்றுகிறோமோ, அதுவே நம் செயலாக வெளிப்படும். 

 

மனுஷனுக்குள் இருந்து வருகிற சிந்தனைகள் மற்றும் எண்ணங்களே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் எனக் கர்த்தர் கூறுகிறார். கோபம், மூர்க்கம், எரிச்சல், பொய், களவு இவைகளே ஒரு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார். ஆவியின் கனியாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என்பவை நம்மில் பெருகப் பெருக, மாம்சத்தின் கிரியையாகிய கோபம், எரிச்சல், பொறாமை போன்ற காரியங்கள் நம்மை விட்டு நீங்கிவிடும். நாம் ஆவியின் கனியை பெறுவதில் அதிகப்படியான பிரயாசம் எடுக்க வேண்டும். அதற்கு முகக் கண்ணாடியைப் போன்று என் சுயரூபத்தை காண்பித்துக் கொடுக்கும் வேதவசனத்தைப் படித்து நாம் நம்மை அநுதினமும் சரி செய்துகொள்ள வேண்டும்.      

 

ஆம், அன்பரே! கிறிஸ்தவ வாழ்வின் இருதயம் போன்றது ஜெபமும், வேதவாசிப்பும்தான். இதனை மறந்தே போகாதீர்கள். கம்ப்யூட்டரில் எப்படி உள்ளீடுகிற விஷயங்கள் சேமிக்கப்பட்டு அவற்றை வெளியிடுகிறதோ அதே போல் நம் ஒவ்வொருவரின் இருதயமும் வேத வசனங்கள் மற்றும் ஜெபத்தால் நிரப்பப்படும்போது ஆவியின் கனி, பரிசுத்தம் வெளிப்படும். இன்று முதல் நம் இருதயத்தை வேத வாசிப்பு, ஜெபத்தின் மூலம் காத்துக் கொள்ள கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவருக்கும் அருள் செய்வாராக. ஆமென். 

- Mrs. மனுஷியா பவுல் 

 

ஜெபக்குறிப்பு:

வேதாகமக் கல்லூரி மற்றும் ஊழியர் கூடுகைகளுக்கு சமையல் செய்ய “Wood Steamer Boiler” வாங்குவதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al