Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 16-01-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 16-Jan-2022

இன்றைய தியானம்(Tamil) 16-01-2022 (Kids Special)

 

No Free 

 

“உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;…” - நீதிமொழிகள் 28:20 

 

ஐரோப்பாவிலிருந்து நியூயார்க் நோக்கி பயணிகளின் கப்பல் பிரயாணப்பட்டது. 1500 பயணிகள் இருந்தார்கள். Train, விமானத்தில் எப்படி First, Second, third class என்று இருக்கிறதோ அதே போல கப்பலிலும் இருக்கும். வசதி குறைவான ஒரு குடும்பமும் பிரயாணப்பட்டது. அப்பா-அம்மா, மூன்று குழந்தைகள் இருந்தார்கள். முதல் பையனுக்கு 10 வயது, நல்ல விவரமான பையனாக இருந்தான். முதன் முதலாக கப்பலில் பிரயாணம் செய்கிறான். குட்டீஸ் நீங்கள் கப்பலில் பயணம் செய்திருக்கிறீர்களா? சூப்பரா இருக்கும்தானே! அந்தப் பெரிய கப்பலில் உணவகமும், விளையாட்டு அரங்கமும் இருந்தது. இந்த இடத்திற்கு யார் வேண்டுமானாலும் போகலாம், ஆனால் அங்குள்ள பொருட்களை வாங்க பணம் கொடுக்கணும். இவனால் பணம் கொடுத்து வாங்க முடியாததால் சுற்றிப் பார்த்து விட்டு வந்துவிடுவான். 

 

ஒருநாள் அந்த உணவகத்தில் பார்த்த கேக் ஒன்றை வாங்க ஆசைப்பட்டான். அந்த கேக்கின் விலை 4 டாலர். வேகமாக அப்பாவிடம் சென்று கேட்டான். அப்பாவும் பாக்கெட்ல, பையில இருக்கிற பணத்தை எல்லாம் சேர்த்து கணக்கு பார்த்தால் 3 ½ டாலர்தான் இருந்தது. அவனால் கேக் வாங்க முடியாது. ஆனால் தினமும் அந்த கேக்கை பார்த்து விட்டு வருவான். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் கேக் ஒன்றை வாங்கி அவனுக்கு கொடுத்தார். அவன் வேண்டாமென்று சொல்லிவிட்டான். நான் பணம் கொடுத்துத்தான் வாங்குவேன் என்றதும் அவருக்கு ஆச்சரியமாய் இருந்தது. நமக்கு யாராவது கேக், சாக்லேட் கொடுத்தா உடனே வாங்கி சாப்பிடுவோம் இல்லையா? தெரியாத நபர் என்ன கொடுத்தாலும் வாங்கவே கூடாது சரியா குட்டீஸ். இவனை கவனித்துக் கொண்டிருந்த அந்த மனிதர் சொன்னார், “தம்பி நீ தினமும் கேக்கை ஆசையோடு பார்த்து விட்டு செல்வது எனக்கு வருத்தமாய் இருக்கிறது. நான்தான் இந்த hotel-க்கு முதலாளி இந்தா கேக் வாங்கிச் சாப்பிடு” என்று சொன்னார். அவன் கேக் வாங்காமல், “எனக்கு ஏதாவது வேலை கொடுங்க சார். என்ன வேலை என்றாலும் செய்யத் தயார்” என்று 2 மணி நேரம் வேலை செய்து 10 டாலர் சம்பளம் வாங்கினான். இரண்டு மடங்கு கேக் வாங்கிக்கொண்டு தன் அறைக்கு ஓடினான். அந்த முதலாளி சொன்னார், “நிச்சயமா இந்தப் பையன் அவன் வாழ்க்கையில் பெரிய ஆளாக வருவான். உண்மையாய் உழைப்பவனை உயர்வு தேடி வரும்” என்று மெச்சிக் கொண்டார். 

 

செல்லக்குட்டிகளே! நாம் நினைத்த பொருள் ஈஸியா, இலவசமா கிடைத்தா உடனே வாங்கிடுவோம்தானே! ஆனா அந்தக் குட்டிப் பையன் உண்மையா வேலை செய்து வாங்கினான். பொய் சொல்லி, ஏமாத்தி, காசு கொடுக்காம இப்படியெல்லாம் நீங்க இருக்கவே கூடாது. Exam-ல நல்ல மார்க் வாங்க பிட் அடிக்கக் கூடாது, பார்த்து எழுதக் கூடாது. கஷ்டப்பட்டு, முயற்சித்து எந்தக் காரியத்தையும் உண்மையாய் செய்யும்போது, சந்தோஷமும், உயர்வும் உங்களைத் தேடி வரும். உண்மை என்ற ஏணிதான் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். Ok தானே. 

- Mrs. ஜோதி ஆனந்த்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş jojobet matbet vaycasino marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş matbet matbet giriş matbet güncel giriş yakabet yakabet giriş yakabet güncel giriş betsmove betsmove giriş betsmove güncel giriş betsat betsat giriş betsat güncel giriş safirbet safirbet giriş safirbet güncel giriş dumanbet giriş dumanbet dumanbet güncel giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş marsbahis