Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14-01-2022
Share:

By Village Missionary Movement

Friday, 14-Jan-2022

இன்றைய தியானம்(Tamil) 14-01-2022

 

போர்முனையா – போர்வையா? 

 

“விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்;…” -1தீமோ. 6:12

 

ஏத்தியனாகிய உரியா ஒரு நல்ல போராளி. போர்க்களத்தில் எந்தவொரு படைவீரனையாவது அழைத்து, “நீ வீட்டுக்குப் போய் உன் மனைவி மக்களோடு சந்தோஷமாக இரு” என்று கூறினால் எவராவது போகத் தயங்குவாரா?... இல்லவே இல்லை. இஸ்ரவேலின் சிறந்த அரசனாகிய தாவீதின் காலத்தில் இப்படித்தான் உரியா என்ற ஒரு படைவீரனுக்கு கட்டளை கொடுக்கப்பட்டது. உரியாவை அரசனே அழைத்து, வீட்டுக்குப் போகச் சொல்லி ஊக்கமூட்டினார். ஆனால் உரியாவோ வீட்டுக்குப் போக மறுத்துவிட்டான். இப்படி வித்தியாசமாக நடந்து கொண்டதற்கான காரணத்தை கேட்டபோது, “தேவனுடைய உடன்படிக்கை பெட்டியும் இஸ்ரவேலின் சேனையும் போர்க்களத்தில் இருக்கும்போது, நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும் என் குடும்பத்தோடு மகிழ்ச்சியாயிருப்பதற்கும் என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனா?” என்று உரியா சொன்னான். 

 

ஒரு சிறிய வீரனான உரியா தன் தேவன் மேலும், தன் அரசன் மேலும் வைத்திருந்த கடமை உணர்வைப் பாருங்கள். தன் நாட்டு மக்களுக்காக போர்முனையில் நிற்பதைவிட, தன் சந்தோஷம் முக்கியமா என்று வைராக்கியமாயிருந்தான். இப்படிப்பட்ட ஒரு கடமை வீரனின் உயிர் அநியாயமாய் போய்விட்டாலும், அந்த வார்த்தைகள் இன்றும் வேதத்தில் பேசிக் கொண்டிருக்கிறதே! கடமையாற்ற வேண்டிய தாவீதுக்கள் போர்முனையில் இராமல் போர்வைக்குள் இருப்பதால், பாவங்களும், சாபங்களும் பெருகிவிட்டனவே! அன்று கோலியாத்தை வீழ்த்திய தாவீதுக்கள் எங்கே? பத்சேபாள்களை வெல்ல முடியாமல் தடுமாறுகிறார்களோ? தாவீதிற்கு ஆரம்பத்திலிருந்த வைராக்கியமும் அமர்க்களமும் எங்கே போயிற்று? அந்தோ! போர்முனையில் உரியா, போர்வைக்குள் தாவீது! எத்தனை பரிதாபம்.

 

நண்பர்களே! இன்றைக்கும் தேவனுக்காக செயல்பட வேண்டிய நாமும் நம் பொறுப்புகளை மறந்து தூங்கிக்கொண்டிருக்கிறோமா? நம் மன விருப்பப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? உணர்வடைவோம். முழங்கால்களை முடக்கும் வரையில் வெற்றி என்பது வார்த்தையில்தான் இருக்கும், வாழ்வில் இராது. எழுந்திடுவோம்! தேவ சமுகத்தில் விழுந்திடுவோம்! விசுவாச யுத்தம் செய்வோம்! சோர்வுகளையும், பெலவீனங்களையும், கஷ்ட, நஷ்டங்களையும் வென்றிடுவோம்.

- Mrs. ரூத் அனீஷ் 

 

ஜெபக்குறிப்பு:

“பதிவிடை மிஷனெரி” என்று நம்மோடு இணைந்துள்ள ஒவ்வொருவரும் ஜெப ஆவியினால் நிரப்பப்பட ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al