Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13-01-2022
Share:

By Village Missionary Movement

Wednesday, 12-Jan-2022

இன்றைய தியானம்(Tamil) 13-01-2022

 

விலையேறப்பெற்ற பொக்கிஷம் 

 

“வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்;…” – யோவான் 5:39 

 

தனக்கென்று ஒரு வேதாகமத்தை வாங்க மேரி ஜோன்ஸ் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல! பணம் கொடுத்தாலும் வேதாகமத்தை வாங்குவது கடினமாக இருந்த காலம் அது! ஆண்டவருடைய கிருபையால் எழுதப் படிக்கக் கற்ற அச்சிறுமி போக வர ஆறு கிலோ மீட்டர் நடந்து சென்று வேதாகமத்தைப் படித்து வந்தாள். தானும் ஒரு வேதாகமத்தை வாங்க வேண்டுமென்று வாஞ்சையைப் பெற்றாள். அதற்காக ஆறு ஆண்டுகள் கடினமாக உழைத்து சிறுகச் சிறுகப் பணம் சேகரித்தாள். அப்படியும் 80 km வெறுங்காலில் நடந்து சென்று வேதாகமத்தை வாங்க வேண்டியிருந்தது. வேதாகமத்தை வாங்கிய அவள் ஆண்டவருடைய வசனங்களை கற்று மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடந்தாள். அவளுடைய முன்மாதிரியான வாழ்க்கையை கண்டதின் மூலமும், அவளுடைய ஆலோசனைகளைக் கேட்டதின் மூலமும் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். 

 

“வேதத்தை படிக்காத ஒருவன் பயனுள்ள கிறிஸ்தவனாக வாழ்ந்ததை நான் கண்டதில்லை. தன் வேதத்தை புறம்பே தள்ளிவிட்டு, ஆண்டவரை நோக்கி ஜெபித்தாலும் அவருடைய பணியில் தன்னை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டாலும் தேவன் அவனை அதிகம் பயன்படுத்த முடியாது” என்று டி.எல்.மூடி என்னும் பிரசங்கியார் கூறினார். “தேவன் மனிதனுக்கு தந்த மிகச் சிறந்த பரிசான இயேசு கிறிஸ்துவோடு, வேதத்தையும் கூடுதலாக கொடுத்தார்” என்று ஆபிரகாம் லிங்கன் கூறினார். கர்த்தருடைய வேதத்தை குறித்து சங்கீதம் 19:7-ல் கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது என்று எழுதப்பட்டிருக்கிறது. ஒருவன் உலகத்தையும் நேசித்துக்கொண்டு வேதத்தையும் நேசிக்க முடியாது. உலகில் பல புத்தகங்கள் அறிவை கொடுக்கும், ஆனால் பரிசுத்த வேதாகமம் மாத்திரமே இயேசுவின் அன்பை காட்டும், இரட்சிப்பைக் கொடுக்கும், பரலோகம் சேர்க்கும். அது வெறும் காகிதம் அல்ல, பரிசுத்த தேவனின் இதயத் துடிப்பு. 

 

கர்த்தருக்குள் பிரியமானவர்களே! நம் கையில் இருக்கிற வேதம் விலையேறப்பெற்ற பொக்கிஷம். அநேக மிஷனெரிகளின் தியாகத்தினால் நமக்கு நமது தாய்மொழியில் கிடைத்திருக்கிறது. அதன் முக்கியத்துவத்தை அறிந்து அதை அனுதினமும் வாசிக்க, தியானிக்க, அதன்படி வாழ உங்களை அர்ப்பணியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.

- P. சிவா 

 

ஜெபக்குறிப்பு:

மீடியா ஊழியங்களில் பணிபுரியும் ஊழியர்களை தேவன் விசேஷித்த ஆவியினால் நிரப்பி நடத்த ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al