By Village Missionary Movement
Friday, 15-Jan-2021இன்றைய தியானம்(Tamil) 15-01-2021
பிளாக் காஃபி
“இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்;…” – மாற்கு 14:8
சில வருடங்களுக்கு முன் சிவகங்கை மாவட்டத்தில் வேன் ஒன்றில் குழுவாக ஊழியத்திற்கு சென்றிருந்தோம். கிராமம் கிராமமாக சுவிசேஷம் அறிவித்துக் கொண்டே வந்தோம். ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் கைப்பிரதிகள் கொடுத்து பின்னர் சிறுவர் ஊழியம் செய்து கொண்டிருந்தோம். ஊழியம் முடித்து கிளம்பும் தருவாயில் சித்ரா என்ற ஒரு சகோதரி தன் வீட்டிற்கு வந்து ஜெபம் பண்ணும்படி கேட்டுக்கொண்டார்கள். எங்களில் ஒரு சிலர் அவர்கள் வீட்டிற்குச் சென்று ஜெபித்தோம். எங்களை சித்ராவும் உடன் இருந்த அண்டை வீட்டாரும் உபசரித்ததை இன்றளவும் மறக்க முடியாது. அதில் குறிப்பாக கருப்பு காபியும் முறுக்கும் அடங்கும். நாங்கள் கிளம்பும்போது என்னிடம் “இந்த வழியே போனால் கட்டாயம் எங்கள் வீட்டிற்கு வந்து ஜெபித்துவிட்டுப் போங்கள்” என சித்ரா வீட்டார் கேட்டுக் கொண்டார்கள். தொடர்ந்து அதை எங்களின் பணித்தள கிராமமாக்கி வாரந்தோறும் சென்று ஊழியஞ்செய்தோம். அங்கு அழகான திருச்சபை ஒன்று மகிமையாய் நிறுவப்பட்டுள்ளது.
இயேசுகிறிஸ்து ஊழியத்திற்குப் போகும் வழியில் பெத்தானியாவில் உள்ள சீமோன் வீட்டிற்கு சென்றதை வாசிக்கின்றோம். அங்கே ஒரு பெண் விலையேறப் பெற்ற நளதம் என்னும் உன்னத தைலத்தால் இயேசுவுக்குப் பணிவிடை செய்தாள். அங்கே இருந்த மற்ற எல்லாரைப் பார்க்கிலும் தன்னிடம் இருந்ததை தேவனுக்கென்று செலவு பண்ணின அந்த ஸ்திரீயைப் பற்றி இயேசு நற்சாட்சி கொடுக்கிறார்.
மேற்கண்ட இரு சம்பவத்தில் வாசித்ததுபோல, அந்த சகோதரிகளின் குறைவிலிருந்தும் தங்களால் இயன்றதைச் செய்ததை தேவன் மறந்து விடுகிறவரல்ல. இச்செய்தியிலிருந்து ஆண்டவர் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். உங்களுக்குப் போக மீதியிருப்பதிலிருந்து தேவனுடைய பணிக்குச் செலவிடுங்கள் என்பதல்ல. சாறிபாத் விதவையைப் போன்று தனக்கு இருந்த கடைசியிலும் தேவனுக்கு அதாவது ஊழியத்துக்குக் கொடுப்பதையே ஆண்டவர் விரும்புகிறார். “இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்” (மாற்கு 14:8) என்ற மற்றுமொரு சாட்சியை நீங்களும் பெறலாமே.
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
கடந்த மாதத்தில் அநேக இடங்களில் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை அறிவித்தோம். கேட்ட ஒவ்வொருவரின் உள்ளத்திலும் கிறிஸ்துவானவர் பிறக்க ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250