By Village Missionary Movement
Saturday, 08-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 08-01-2022
இயேசுவோடு துவங்கு
“...விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;” - எபிரெயர் 12:1
ஒரு கன்வென்ஷன் கூட்டமொன்றில் திரள்கூட்ட ஜனங்கள் கூடியிருந்தனர். அங்கே புகழ்பெற்ற பிரசங்கியார் ஒருவர் செய்தியளிக்க அழைக்கப்பட்டிருந்தார். அவருடைய செய்தியின் துவக்க வேளையில் எல்லாரும் ஆர்வத்துடன் செய்திக்காக காத்திருந்தனர். ஆனால் அவர் வந்தவுடன் எல்லாரும் இயேசு இயேசு என்று சொல்லிக் கூப்பிடுங்கள் என்று சொன்னார். இதை சிலர் இவர் ஏன் பிரசங்கம் பண்ணுவதை விட்டு விட்டு சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார் என்றனர். இப்படியே ஒரு ஐந்து நிமிடம் சென்றது. அப்போது அங்கே ஒரு தேவ மகிமை இறங்கியது. அந்தக் கூட்டத்தில் அநேகருக்குள்ளிருந்த பிசாசுகள் அலறியடித்துக் கொண்டு ஓடின. அநேகருக்கு இருந்த வியாதிகளும் சுகமாயின. அநேகர் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு பெரிய இரட்சிப்பை பெற்றுக் கொண்டனர். அதன் பின்பு தேவ அநுக்கிரகத்தால் சிறப்புடன் செய்தியளித்தார்.
இயேசு கிறிஸ்து நமக்காக சிறந்த ஒரு உதவியை செய்கிறார். அது என்னவென்றால், விசுவாசத்தைத் தொடங்கி அதை முடிக்கவும் செய்கிறார். ஆம், ஒட்டுமொத்த வேதாகமத்தில் தங்கள் ஓட்டத்தில் கர்த்தருக்காக ஜெயமாக ஓடி முடித்தவர்களின் வாழ்க்கையில் பெலவீனம், இயலாமை, சோர்வுகள், நெருக்கடிகள் போன்ற இக்கட்டான சூழ்நிலைகள் வந்த போதிலும் ஜெயித்தவர்கள் எல்லாரும் தங்கள் இயலாமையை தேவனிடத்தில் ஒத்துக்கொண்டு, ஆவியானவரின் பெலனைப் பெற்றுக்கொண்டு, தொடர்ந்து ஜெயத்தோடு ஓடி முடித்தார்கள். அவர்கள் அவ்வாறு ஓடும்போது பலர் அவர்களின் விசுவாசத்தைக் கண்டு அவர்களை தூஷித்து துன்பப்படுத்தி இழிவாக எண்ணி பரியாசம் பண்ணினார்கள். ஆனாலும் இவைகள் எல்லாவற்றையும் தாண்டி தேவனை நோக்கியவர்களை அவர் வெட்கப்படுத்தவேயில்லை. அவர்கள் விழுந்தாலும் அவர்களை அவர் தூக்கி நிறுத்தி சரி செய்து ஜெயத்தைக் கொடுத்தார்.
அன்பானவர்களே! இவ்வருடத்தின் துவக்கத்தில் இருக்கும் நீங்களும் கூட அநேக தீர்மானங்களை எடுத்திருக்கக்கூடும். நல்லது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவருடைய பெலன் இல்லாமல் நம்மால் எதுவும் செய்ய இயலாது. இதற்கு முந்தின வருடங்களில் நீங்கள் எடுத்த தீர்மானங்களில் தோல்வியை தழுவியிருக்கலாம். ஆனால் சோர்ந்துபோக வேண்டாம். மேலே நாம் கண்ட பிரசங்கியாரைப் போலவே இயேசுவை முன்னிறுத்தி அவருக்கென்று எல்லாவற்றையும் செய்யுங்கள். விசுவாசத்தை தொடங்கி முடிப்பவர் உங்களுக்காக ஜெயக் கொடியை நாட்டுவார்.
- S. மனோஜ்குமார்
ஜெபக்குறிப்பு:
“மோட்சப் பயணம்” அச்சடிப்பதற்கு மாதந்தோறும் மிகப்பெரிய பணத்தேவை உண்டு. தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250