Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 06-01-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 06-Jan-2022

இன்றைய தியானம்(Tamil) 06-01-2022

 

துணிந்தவன் 

 

“அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.” – அப். 7:56

 

கிரிமியன் யுத்தத்தில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றதால், லண்டன் மாநகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. விக்டோரியா மகாராணி யுத்தத்தில் அரிய-பெரிய தீரச் செயல்களைச் செய்த வீரர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கிக் கொண்டுவந்தார்கள். சில வீரர்களோ, கையிலும், கால்களிலும், பெரிய கட்டுகளோடு வந்தார்கள். சிலர் கைத்தடியை ஊன்றிக்கொண்டு வந்தார்கள். ஒரு புன்னகையோடு விக்டோரியா மகாராணி அனைவரையும் ஊக்குவித்து அவர்களுக்குப் பரிசுப் பொருட்களைக் கொடுத்தார்கள். கடைசியில், ஒரு மனிதனை நான்கு பேர் சேர்ந்து தூக்கிக் கொண்டு வந்தார்கள். அவன் யுத்தத்தில் திறமையோடு போரிட்ட வீரன். அதிலே அவன் இரண்டு கால்களையும், இரண்டு கைகளையும் இழந்திருந்தான். அவன் முகமும் சிதைவடைந்து அருவருப்பாயிருந்தது. 

 

விக்டோரியா மகாராணி, கெம்பீரத்தோடு அவன் அருகில் வந்தார்கள். பெரிய தங்கப்பதக்கத்தை அணிவித்தார்கள். மட்டுமல்ல, குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டு, “நல்லது, உத்தமும் உண்மையுமுள்ள ஊழியனே!” என்று அழைத்தார்கள். அவன் உள்ளம் ஆனந்தத்தால் நிறைந்தது. தன் வேதனைகளை எல்லாம் மறந்து போனான். ஸ்தேவானும் கல்லெறியுண்டு தன் உடம்பிலெல்லாம் ரத்தம் சொட்டச் சொட்ட வேதனையோடு வானத்தை அண்ணாந்து பார்த்து தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதை கண்டபோது, அவர் அவனை வரவேற்கிறதைப் போல் அந்தக் காட்சி இருந்தது. அப்பொழுது கர்த்தராகிய இயேசுவே என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தேவனைத் தொழுது கொண்டான். 

 

இதை வாசிக்கின்ற நண்பர்களே! இன்றைக்கு நம்மைக் குறித்து என்ன சாட்சி இருக்கிறது? யோசித்துப் பார்ப்போம். தேவனுடைய ராஜ்யம் இந்தப் பூமியில் ஸ்தாபிக்கப்பட நாம் துணிந்து நிற்க வேண்டியது மிகவும் அவசியம். நாம் இருக்கிற இடங்களில், வேலை செய்யும் இடங்களில், இயேசுவின் நாமம் அறிவிக்கப்பட, மகிமைப்பட நாம் “எதை இழந்தாலும் பரவாயில்லை” என்று துணிந்து நிற்போம்! ஒரு நாட்டின் வெற்றிக்காக ஒரு மனிதன் தன் கைகளையும், கால்களையும் இழக்கத் துணிவானானால் நம்முடைய தேவனின் பரலோக ராஜ்ஜியத்தின் மேன்மைக்காக நாமும் சில காரியங்களை இழக்க துணிந்து நிற்போம்! 

- Mrs. ஜாஸ்மின்பால் 

 

ஜெபக்குறிப்பு:

இவ்வூழியத்தின் ஸ்தாபகர் சகோ. டேவிட் கணேசன் அவர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al