Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05-01-2022
Share:

By Village Missionary Movement

Wednesday, 05-Jan-2022

இன்றைய தியானம்(Tamil) 05-01-2022

 

புதிய காரியம் 

 

“இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்;…” - ஏசாயா 43:19 

 

எழுபது ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம்:-

ஜோசப்-கிறிஸ்டிபத்மா தம்பதியினருக்கு சுமார் 12 ஆண்டுகளாக குழந்தையே பிறக்கவில்லை. டாக்டர், “உங்களுக்கு குழந்தை பிறக்காது” என்று கூறிவிட்டார். ஜோசப்பின் அக்கா, எபிநேசர் என்ற ஊழியம் செய்கிற அம்மாவை தன் தம்பி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். எபிநேசர் அம்மா ஜோசப் கிறிஸ்டி இருவரின் தலையின் மீது தன் கையை வைத்து ஜெபித்தார்கள். பின், “10வது மாதம் ஒரு பெண் குழந்தை பிறக்கும்” என்று கூறிச் சென்றார்கள். இயேசுவை அறியாத குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, இயேசுவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்டிபத்மா, “இயேசு பகவான் எனக்குக் குழந்தை கொடுப்பார்” என விசுவாசித்தாள். ஆனால் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து, வளர்ந்த ஜோசப், “டாக்டர் இல்லைன்னு சொல்லிட்டார். இந்த அம்மா தலையிலே கை வைத்தா குழந்தை கிடைக்குமா? 10வது மாதம் பெண் குழந்தை பிறக்கும் என்று சொல்றாங்க. சரி, தேதி எழுதி வைக்கிறேன்” என்றார். கர்த்தர் சொன்னால் சொன்னதுதான். கிறிஸ்டி கருத்தரித்தார். 10 வது மாதம் பெண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். விசுவாசத்தை ஊட்டி வளர்த்தாள், அக்குழந்தை ஊழியக்காரியானாள். 

 

உங்களுடைய வாழ்க்கையிலும் எத்தனையோ குறைகள் இருக்கலாம். தேவைகள் இருக்கலாம். தீராத வியாதி, கடன் பாரம், மகனுக்கு வேலை, மகளுக்கு திருமணம் என எத்தனையோ தேவைகள் இருக்கலாம். கவலைப்படாதீர்கள். கர்த்தரை மட்டும் சார்ந்து கொள்ளுங்கள். மனதார அவரைத் துதியுங்கள். தேவைகளைக் குறித்து முறுமுறுக்காதபடி, அவர் செய்த நன்மைகளுக்காக, செய்யப் போகிற நன்மைகளுக்காக நன்றி நிறைந்த இருதயத்தோடு துதியுங்கள். 

 

வனாந்தரத்திலே வழியையும் அவாந்தர வெளியிலே ஆறுகளையும் கர்த்தாதி கர்த்தர் உண்டாக்குவார். ஆடு மேய்த்த தாவீது இஸ்ரவேலின் பேரரசன் ஆனான். அநாதையான எஸ்தர் 127 நாடுகளின் பேரரசியானாள். அந்நிய தேசத்தை சேர்ந்த ரூத் இயேசு கிறிஸ்துவின் மூதாதையானாள். அவர்களை உயர்த்திய தேவன் இப்புத்தாண்டிலே உங்கள் வாழ்விலும் புதிய காரியத்தைச் செய்வார். அற்புதமாய் ஆசீர்வதிப்பார். 

- Mrs. வனஜா பால்ராஜ் 

 

ஜெபக்குறிப்பு: 

இப்புதிய ஆண்டில் ஊழிய எல்லைகள் விரிவாக்கப்பட. தேவன் கொடுத்த திட்டங்கள் தடையில்லாமல் நிறைவேற ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al