By Village Missionary Movement
Sunday, 02-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 02-01-2022 (Kids Special)
சாக்லேட் நீதான்
“...ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்;… அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள்...” – மத்தேயு 6:26
Hello! குட்டி செல்லங்களே! இந்த புதிய வருடத்திலே உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கடந்த வருடம் நம்மை கண்மணிபோல் பாதுகாத்து, எல்லா தீமைக்கும் விலக்கி நம்மை இரட்சித்த ஆண்டவருக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கணும். எத்தனையோ பேர் போன வருஷம் இருந்தவங்க...இந்த வருஷத்தில் இல்லைதானே! நம்மையெல்லாம் இயேசப்பா உயிரோடு வைத்திருக்காங்க இல்லையா? அதனால் Jesus உங்க சித்தம் என் வாழ்க்கையில் நடக்கட்டும் என்று உங்களை ஆண்டவர் கரத்தில் கொடுத்தால் super-ரா உங்களை வழிநடத்துவாங்க. Ok குட்டீஸ் கதை நேரம் வந்தாச்சு...கேட்கலாமா?
பெனிட்டா, ஜெனிட்டா என்று இரண்டு சிறுமிகள் டெல்லியில் வளர்ந்து வந்தாங்க. நல்ல கருப்பாக இருப்பாங்க. அவங்க வீட்டு பக்கத்துல ஒரு அழகான பூங்கா இருந்தது. அடிக்கடி அங்கே விளையாட போவாங்க. நீங்களும் கூட பூங்காவுக்கு போவீங்களா? Jollyயாக இருக்கும்தானே! என்னவெல்லாம் விளையாடுவீங்க. ஊஞ்சல், சீசா....இப்படி நிறைய நேரம் விளையாடுவீங்க அப்படித்தானே! அதேபோலத்தான் பெனிட்டாவும், ஜெனிட்டாவும் விளையாடிக் கொண்டிருக்கும்போது காக்கா...காக்கா என்று கிண்டலடித்து சிரித்தார்கள். வட இந்திய பிள்ளைகள் சிகப்பாக இருப்பதால் அப்படி செய்தார்கள். அந்த இரண்டு சிறுமிகளுக்கும் ரொம்ப வருத்தமாய் இருந்தது. கடவுள் எதற்கு எங்களை இவ்வளவு கருப்பா படைத்தாரோ! கொஞ்சம் கலரா இருந்தாலும் எங்களை கிண்டலடிக்க மாட்டாங்களே! என்று கவலையாகவே இருந்தாங்க. இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அம்மா என் செல்லக் குட்டிகளுக்கு என்னாச்சுன்னு கேட்டு தெரிந்து கொண்டார்கள். “யார் சொன்னது? உங்களை காக்கா என்று...நீங்க காக்கா இல்லை சாக்லேட்” என்று சொன்னதும் அவர்கள் முகத்தில் புன்னகை ஒளிவீச தொடங்கியது. “ஆண்டவர் உங்களை அவருடைய சாயலாகவே படைத்திருக்கிறார். ஆகவே உங்களை நேசிக்க பழகணும். அதுதான் ஆண்டவருக்கு பிரியமானதும் கூட” என்று அம்மா சொன்னதும் இரண்டு சிறுமிகளும் துள்ளிக்குதித்தார்கள். நாங்க சாக்லேட் எங்களை எல்லாருக்கும் பிடிக்கும். இயேசப்பாவுக்கும் ரொம்பவே பிடிக்கும். ஏனென்றால் நாங்க அவரோட பார்வையில் விசேஷமானவர்கள் என்பதை புரிந்து கொண்டார்கள். அவர்கள் மனநிலையில் பெரிய மாற்றம் வந்தது.
தம்பி-தங்காய், நீங்களும்கூட நான் கருப்பா இருக்கிறேன் கலரா இல்லை, அழகா இல்லை. ஏழையா பொறந்துட்டேன் என்றெல்லாம் feel பண்ணக் கூடாது. நீங்க இயேசப்பா பார்வையில் very special. நீங்களும் சாக்லேட்தான், குட்டீஸ், உங்களுக்கு சாக்லேட் என்றால் ரொம்ப பிடிக்கும்தானே. Very good.
- Mrs. ஜீவா விஜய்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250